Sunday, March 7, 2021

தட்டிவான் காதல் 4 இறுதிப்பகுதி

 தட்டிவான் காதல் பகுதி 4. (இறுதி)

,..............................................................
"இப்ப பார் அந்தத் தட்டிவான் எங்களுக்குக் கிட்ட வந்து நிக்கும் "Z
"எப்பிடித் தெரியும் உனக்கு" Y
"காதலுக்கு எண்டொரு ஈர்ப்பு சக்தி இருக்கெடா . இவளின்ர கனகாலக் காதல் தவம் தான் அந்தத் தட்டிவானைத் தேடி வர வைச்சிருக்கு . " Z
நாம் நின்ற அவல நிலையிலும் அவங்களின் கிண்டல் சிரிப்பு வந்தது
அந்த செம்மண் நிற கிரவல் ரோட்டுக்கு குறுக்கால நிண்டு மறிச்ச பிறகு தான் தட்டிவான் நிண்டது . கிழங்கடுக்கினமாதிரி பிதுங்கப் பிதுங்க மனிதர்களை ஏற்றியிருந்தது. தட்டி கழட்டித் தொங்க விடப்பட்டிருக்க , விழிம்பு வரை சனம் வழிந்து கொண்டிருந்தது. அதற்குள் பயணவழியில் அங்கின்கென கூட வந்த, தலைகள் சில தெரிஞ்சது. எங்களைக் கண்டதும் விளிம்பில் தொங்கிய சிலர் கிடந்த கொஞ்ச இடத்தையும் அடைச்சு காலை அகட்டி வைச்சினம். இன்னும் சிலர் இதுக்கு மேல எத்தாதேங்கோ மூச்சு முட்டிச் சாகப் போறம் எண்டு ஓலமிட்டிச்சினம்
தட்டிவானை ஓடியவர் இறங்கி பின்னால வந்து மினிவான் கிளீனர் போல" உள்ளபோ உள்ளபோ" எண்டு கத்தினார் . எங்கேயோ கந்தோரில் வேலை செய்யிற மாதிரி தோற்றமிருந்த அப்பா வயதுக்காரர் "இன்னும் நாலுபேரை ஏத்துறது எண்டால் நாங்கள் நசுங்கிச் சாகிறதோ " எண்டு சண்டைக்குப் போனார்.
"ஏனையா தெருவில நிண்டு கையாட்டேக்க சனம் கூடிப் போச்சு எண்டு நானும் உங்களை ஏத்தாமல் வந்திருக்க வேணும். இருட்டப் போகுது இளம் பெடியள் . பொம்பிளைப் பிள்ளை வேற கூட நிக்குது. எந்தப் பக்கத்தால எவன் வந்து முடிப்பான் எண்டு தெரியாமல் கிடக்கு நிலைமை. விட்டிட்டுப் போவம் எண்டு சொல்லுற நீயெல்லாம் என்ன மனுசன் ஐயா "
"அப்ப அதை மட்டும் ஏத்துங்கோ போதும்"
"நான் தனியா போகமாட்டேண்டா. உங்களை விட்டால் எனக்கு ஆரக் கண்டாலும் பதட்டமா இருக்கும்"
"உங்கட பிள்ளையள் எண்டால் இளந்தாரிப் பிள்ளையளை இந்த நிலையில நடுத்தெருவில நிக்க விட்டிட்டுப் போகச் சம்மதிப்பீங்களே" எண்டு அதட்டிப் போட்டு ஏறுங்கோ பிள்ளையள் எண்டார்.
படியில்லாத தட்டி வானில் ஏறமுடியாமல் தடுமாறி,ரெண்டு மூண்டு தரம் உன்னி, பிறகு அவங்கள் மேல ஏறிநிண்டு கைகுடுக்க பிடிச்சுக் கொண்டு உந்தி ஏற , காத்திருந்தது போல அவ்வளவு நேரமா மழையில் ஊறின செருப்பு ஒட்டுவிட்டு அறுந்து தொங்கியது. அதை அதிலேயே கழட்டிப் போட்டுவிட்டு . மேலே ஏறி அதன் கூரையில் பிடிச்சுக் கொண்டு கழுத்தை வானுக்கு வெளியால நூற்றிப் பத்துப் பாகையில நீட்டிக் கொண்டு பயணம் செய்யத் தொடங்கின பிறகு தான் தட்டிவானில தொங்கிறது எவ்வளவு கஸ்ரமெண்டு தெரியத் தொடங்கிச்சு.
அந்தளவு பேரையும் ஏத்திக்கொண்டு பெறுமாதப் பிள்ளைத்தாய்ச்சி லேபர் ரூமுக்குப் போற மாதிரி அசைஞ்சு அசைஞ்சு தட்டிவான் ஊர்ந்த அழகிருக்குப் பாருங்கோ சொல்லி வேலையில்லை. அதுக்குள்ள பொன்வானம் பன்னீர் தூவுதே இந்நேரம் .....எண்டு மழைக் காதலன் வேறு தட்டிவானுக்கு ஈடு கொடுத்துக் காதலித்துக் கொண்டிருந்தான்
"டேய் இண்டைக்கு இவள் ஜென்ம சாபல்யம் பெற்ற நாள்" Z
"ஏண்டா"X
"தட்டிவான், மழை என்று எல்லாக் காதலர்களோடும் கூடியிருக்கிறாள்" Z
"எருமை வாயை மூடு நாங்க மட்டும் தனியா இல்லை இதில . சனம் கண்டபடிக்கு கற்பனை பண்ணப் போகுது"Y
நெருமிக்கொண்டே கிசுகிசுத்ததும் அடங்கினான்
மழையில் கால் ஊறி தட்டிவானின் விளிம்புத் தகரத்தில் அழுத்தமாய் அண்டி வெட்டுவது போல வலித்தது. உள்ளங்கையும் விரல்களும் விறைத்துச் சூம்பி பிறந்த பிள்ளையின் கைகளைப் போலிருந்தன. மேல் தட்டியை பலமாகப் பற்றியிருக்க முடியவில்லை. நனைந்த சட்டை அப்போது தான் மனதை உறுத்தியது. அவங்கள் தவிர்ந்த எல்லாரும் உற்றுப் பார்ப்பது போல உடல் கூசியது.
"என்னால முடியல்லடா நோகுது ".
"கொஞ்ச நேரம் பொறுத்துக் கொள். எவ்வளவு எல்லாம் கடந்து வந்திட்டம்." Y
"கை நிக்குதில்லைடா விழுந்திடுவன் போல இருக்கு"
"அழுதிடாத மனப் பலத்தை விட்டால் தான் விழுவாய்" X
"முடியல்லடா கை விட்டிடும் போல இருக்கு"
"கீழ குனிஞ்சு ரோட்டைப் பார்க்காத தலை சுற்றும்"Z
அதற்குள் வானுக்குள் தரையில் இருந்த பெண் "புள்ளை இதில வந்து இரம்மா" எனக் கூப்பிட்டார். ஆட்களுக்கு இடையால் கண்ணை நுழைத்துப் பார்க்க வயலோடு காய்ஞ்சு வைக்கல் போலயிருந்தார். "இடமில்லையேம்மா அங்கே" என்றேன்.
"தலை சுத்திக் கித்தி ரோட்டில விழுந்து போகாத இதில இரு "எண்டு மடியை காட்டினார் .
அம்மம்மா வயது அம்மாவின் மடியில் இருக்க மனம் வரயில்லை அவவை க் கட்டிப்பிடிச்சுக் கொஞ்ச வேணும் எண்ட விருப்பம் மட்டும் வந்தது.
"இன்னும் முடியாட்டில் வந்து இருக்கிறன் அம்மா".
அவ கோதாரில போவார் கொள்ளை கொண்டு போகட்டும் எண்டு யாரையோ திட்டினா . அது அந்த வானில் வந்தவர்களையோ அவரது குடும்பத்தினரையோ இல்லை எண்டு புரிஞ்சுது.
"நாங்கள் கையை இணைச்சுப் பிடிச்சிருக்கிறம் நீ மெதுவா மேல பிடிச்சுக் கொண்டு எங்கட கையில சாய்ஞ்சு நில்" Y காதுக்குள் கிசுகிசுத்தான்
தலையைத் திருப்பிப் பார்த்தன் தட்டிவான் விளிம்பில் முழுபாதமும் பதிக்க இடமில்லாமல் குதி வெளியில தொங்க காலூண்டியிருந்த அவங்களின் கைகள் ஒரு பலமான சங்கிலியைப் போல இறுக்கமாகப் பிணைஞ்சிருந்தன. விபரிக்கத் தெரியாமல் என்னமோ ஒரு உணர்வு. ஆனால் அழுகை வந்தது. இந்தக் கைகளின் இறுக்கம் ஒருகாலமும் பிரியவே கூடாது. என்றது மனம் திடமாய் .
தட்டிவானை விட சைக்கிளில் வேகமா போகலாம் போல இருந்தது .
சாவகச்சேரிக்குக் கிட்ட மட்டும் தான் தட்டி வான் வந்தது . அப்போது இரவு ஒன்பது, பத்து ஆகியிருக்கக் கூடும் அதுக்குமேல எங்கேயும் போக முடியாது
சாவகச்சேரியில் அவனின்/ அவங்களின்/ எனதும் அம்மம்மா வீடிருந்தது
இரவு நாங்கள் போன கோலத்தைக் கண்டு அம்மம்மாவும் ஐயாவும் பதறிப் போச்சினம் . மழை நிண்டிருந்தது. ஐயா அவசரமா கிடாரத்தில தண்ணி சூடாக்கித் தந்து குளிக்கச் சொல்லிச்சினம். குளிச்சு முடிச்சு , அங்கு ஜெயந்தி அக்கா வந்து தங்கி விட்டுப் போன போது விட்டுப் போன அவளின் சட்டையைப் போட்டுக் கொண்டு வர அம்மம்மா சூடா மல்லிக் கோப்பி தந்து விட்டு, அவவிடம் என்ர தலை முடிக்கு போதுமான அளவு சாம்பிராணி இல்லை எண்டு பொச்சு மட்டையை கொளுத்தி அந்தப் புகையில் என் நீண்ட தலைமுடியை காயவிட்டா. புட்டும் ரசமும் கத்தரிக்காய் பிரட்டலோ என்னவோ சூடா த் தந்து அவங்களைப் படுக்க அனுப்பிப் போட்டு அம்மம்மா தன்ர முந்தானையால் என்னையும் இழுத்துப் போர்த்தி அணைச்சுக் கொண்டு போர்வையால் மூடிக் கொண்டு படுத்தா. எதிலோ எல்லாம் தப்பி வந்து சொந்தக் கூட்டில் சரணடைஞ்சது போல அப்படி ஒரு நிம்மதியான தூக்கம் அது.
விடிஞ்சு அம்மம்மா மத்தியானம் சாப்பிட்டு விட்டுப் போகலாம் எண்டு சொன்ன போது தான் நான் வந்த காரணம் பற்றியும் இண்டைக்கு மத்தியானம் தான் கல்யாணம் எண்டும் சொன்னன். அவங்களின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிச்சது
"எருமை மாடு இதுக்காகத் தான் எங்களை விட்டு ஓடி வந்தனியோ "Y
"சொல்லிப் போட்டு வந்தால் விட்டிருப்பீங்களோ"
"வருசங்களுக்கு முன்னால் குடுத்த வாக்குறுதி டா. உங்களைப் போல என்னோடு போன இடமெல்லாம் கூடவே காவித் திரிஞ்சவன் ."
"ஓமோம் வல்லிபுரக் கோயில் கடலிலே காவு குடுத்திருப்பான்."X
"நீங்கள் ஏண்டா வந்தனீங்கள் "
"கேக்காத. வாற கொதிக்கு வெளுத்துப் போடுவன்" Y
"நீ சொல்றா"
"உன்ர சஜீவாவின்ர மஞ்சுள தான் டெலிபோன் பண்ணினவன். தான் விடிய வெள்ளன வேலைக்குப் போக பேப்பர் office அமளிப்படுகுது. என்னண்டு பாத்தால் வடபகுதியில ஆமிக்கு அதிக இழப்பாம் இண்டைக்கு போற பிளானை கான்சல் பண்ணுங்கோ எண்டான். நாங்க போகயில்லையே எண்டதுக்கு மாலினி போறதா சஜீவ சொன்னாள் நீங்களும் போறியள் எண்டு நினைச்சன். அவளை மறியுங்கோ எண்டான். உன்ர இடத்துக்கு ஓடிப் போனால் நீ போட்டாய் எண்டினம் அப்பிடியே நாங்களும் இன்னொன்றில் ஏறி வந்திட்டம் "
எனக்குக் கண்ணீர் வந்தது மறைச்சுக் கொண்டன்.
ஹ்ம் இது தான் கடைசிப் பயணமாக இருக்கலாம்
பஸ் பிடிச்சு வீட்டுக்குப் போனால் வீடே துடைத்துக் கொண்டு கல்யாணத்துக்குப் போயிருந்தது. மாற்றக்கூட உடுப்பு / திறப்பிருக்கேல்ல . ஜெயந்தி அக்காவின் சட்டை தொள்ளலாக இருந்தது. சம்மாடிக் கட்டி சட்டையை விரிச்சு முழுக்காலையும் மூடி சாமியார் நிஷ்டையில் இருப்பது போல பேசாமல் இருந்தன்
இருந்தால் போல பாத்தா ஆமிக்காரன் துரத்தி பதகளிச் ச மாதிரி அம்மா ஓடி வாறா. என்னம்மா எண்டு நானும் பதறிப் போய் கேட்டால் , "நேற்றுக்குள்ள வந்திடுவன் , பிந்தினால் கல்யாண வீட்டுக்கு நேரா வருவன் எண்டு கடிதம் அனுப்பின பிள்ளையை காணாட்டில் நான் என்னவெண்டு நினைக்க " வழியில கொழும்பு பஸ்ஸை சுட்டவங்களாம் மறிச்சவங்களாம் பிடிச்சவங்களாம் எண்டெல்லாம் சனம் கதைக்குது.
"க்கும் சொன்னவை வாயால சுட்டிருப்பினம். நாங்க வந்த நேரம் எதுவும் காணல்லை அம்மா".
அம்மாவுக்கு பொய் சொல்ல ஒரு மாதிரித்தான் இருந்தது. எண்டாலும் இப்ப எல்லாத்தையும் சொன்னால் கல்யாணத்துக்குப் போகாமல் விறாந்தையில இருந்து அழத் தொடங்குவா. கல்யாணவீட்டில சுடச்சுட இந்தக் கதை தான் ஓடும் எல்லாத்தையும் சந்திக்கிற மனநிலை எனக்கில்லை அப்போது. பிறகு நல்லமாதிரி வந்து இறங்கிற ஒரு நாளில இந்தக் கதையை சொல்லலாம் என நினைச்சுக் கொண்டன்.
"ஆரோட வந்தனி"
"அவங்களோட தான் கொண்டு வந்து கந்தையாகடைச் சந்தியில இறக்கிப் போட்டு அங்கால போறாங்கள் "
"அப்ப சரி பயமில்லை . கெதியா வெளிக்கிடு ."
வெளிக்கிட்டு மினி பஸ் பிடிச்சு , தட்டிவான் ஏறின தூரமளவு தூரத்துக்குப் போய் இறங்கேக்க முகூர்த்த நேரம் நெருங்கியிருந்தது.
குடல் தெறிக்க ஓடி அங்க போனால் கலியாணத்துக்கு வந்த சனம் எல்லாம் வெளிக்கிட்டு சோடிச்சுக் கொண்டு நிக்குது . கல்யாண மாப்பிள்ளை கட்டிலில் குப்பறக் கிடக்கிறான் ". எழும்பன் ராசா" எண்டு தாய்க்காறி கெஞ்சிக் கெஞ்சி திருப்பள்ளியெழுச்சி பாடிக்கொண்டிருக்கிறா. அவன்
"எழும்புறன் எண்டால் எழும்புவன் தானே போங்கோ அங்கால "எண்டு முகத்தை நிமிர்த்தாமல் கத்திக் கொண்டிருக்கிறான்.
அவவிட வாயைப் பொத்தி இஞ்சால இழுத்து கொஞ்சி போகும் படி சைகை காட்டிப் போட்டு
"டேய் சித்தப்பா நீ எழும்பிறதுக்குள்ள ஆராவது தாலியைக் கட்டிப் போடப் போறான் எழும்படா" எண்டதும் துள்ளிக் குதிச்சு எழும்பினவன் முகத்தில் அத்தனை பிரகாசம். கிட்ட வந்தான் கண்களில் கண்ணீர் முட்டியிருந்தது.
"நான் வருவன் எண்டு சொன்னாள் எப்பிடியும் வருவன் தெரியுமெல்லோ "
அவன் பதில் சொல்லில்லை . முகத்தின் பிரகாசத்தில் உதட்டின் துடிப்பில் பதிலிருந்தது
அண்ணன் வயதுள்ள, இரத்தபந்தத்தில் சித்தப்பா முறையானவன் . வீம்புக்கு சித்தப்பா எண்டு கூப்பிடும் எல்லாத் தரமும் அவனிடமிருக்கும் சங்கோஜமும் சந்தோசமும் அப்பவும் இருந்தது.
கல்யாணம் முடிஞ்சது. பெண் மாப்பிள்ளை ஏறிய காரில் என்னையும் வந்து ஏறு எண்டு கார் வெளிக்கிடும் வரைக்கும் வாயாலும் கையாட்டியும் கூப்பிட்டுக் கொண்டேயிருந்தான்.
காருக்குப் பின்னால் இரண்டு வான்களும் ஒரு தட்டிவானும் நிண்டது . வான்களில் ஆட்கள் ஏறேக்கையும் "போய் ஏறனம்மா " எண்டு சித்தி சொல்லேக்கையும் நான் ஏறாமல் மறைவா நிண்டன். தட்டிவானில் இப்பவாவது நல்லமாதிரி பெருமையா போகலாம் எண்டு.
முக்கியமான எல்லாரையும் ஏத்தி அனுப்பிப் போட்டு கடைசி ஆளாய் அம்மம்மா வானில ஏறேக்க, "ஏதோ நிலைமை சரியில்லை போல சனம் கதைக்குது. புள்ளையை பத்திரமா கூட்டிக் கொண்டு கெதியா வீட்டுக்குப் போய் சேர் பெரியபிள்ளை" ஏண்டா.
பாட்டி பேச்சுக்கு எப்பவும் எதிர்ப்பேச்சு இருந்ததேயில்லை வாகனங்கள் வெளிக்கிட்டுப் போக தட்டிவான் பின்னால எதோ தட்டுமுட்டுச் சாமான் எல்லாம் ஏத்திக் கொண்டு போனது. இப்போது தட்டிவானைத் தவற விட்டது கவலையா இல்லை.
வீட்டுக்குப் போய் இரண்டு நாட்கள் இருந்து போட்டு மூன்றாம் நாள் பக்கத்தில் சுந்தலிங்கம் மாமாவிட்டை போய் அவர் கிணத்தடியில் உடுப்புக்குச் சவுக்காரம் போட்டுக் கொண்டிருக்க பக்கத்துக் கல்லில் இருந்து கொண்டு" நாளைக்கு என்னை பஸ் ஏத்தி விடுங்கோ மாமா "எண்ட போது
"கொழும்பு பஸ் ஒடயில்லையாம் பிள்ளை. விசாரிச்சுக் கொண்டு தான் வந்தனான்" எண்டார்.
"பரவாயில்லை வவுனியா வரைக்கும் போற எதிலையாவது ஏத்தி விடுங்கோ "
"இதப் பதட்டம் அடங்க பஸ் ஓடும் அப்ப போகலாம் தானே பிள்ளை".
"ஐயோ மாமா எனக்கு சனி ஞாயிறு கிளாஸ் . திங்கள் வேலை. நான் வெள்ளி இரவே அங்க நிக்க வேணும் "
"போக்குவரத்து சீரில்லை எண்டு வேலையில சொல்லலாம்."
"இல்லை மாமா நான் போகணும்"
"பிள்ளை மாமா சொல்லுறதை கேக்கோணும்" .
இப்ப அவருக்கு ஆதரவா நந்தினி அதையும் வந்தா
மாமாவுக்கு பெண் பிள்ளைகள் உயர்ந்தால் அவ்வளவு பிடிக்கும் . அதிலும் பிரபலமானால் இன்னும் பிடிக்கும் எண்டது எனக்குத் தெரியும்
"மாமா இந்தக் கிழமை வீரகேசரியில என்ர 'கண்ணை இமைமறந்தால்' தொடர்கதை வாசிச்சீங்களோ.
"பின்ன மாமா வாசிக்காமல் ...... கேக்கிறவைக்கெல்லாம் என்ர மருமோளின்ர கதை வாசியுங்கோ எண்டு சொல்லிச் சொல்லி வாசிக்கக் குடுக்கிறனான். "
"சின்னப் பெட்டை. குழப்படிப் பெட்டையாவும் இருக்கிறாள் வயதுக்கு ஒவ்வாத வில்லங்கமான கதை அது. அவள் தான் எழுதிறாள் எண்டு நம்ப முடியேல்ல எண்டேக்க மாமாக்கு எவ்வளவு சந்தோசம் எண்டு நினைக்கிறாய்."
மாமாக்கு முகமெல்லாம் ஒளி தெரிஞ்சது.
"அடுத்த கிழமை கதை குடுக்கயில்லை எண்டால் பிறகு போட மாட்டினம் மாமா "
முழுக்கதையும் குடுத்தப் பிறகு தான் பிரசுரிப்பே ஆரம்பிச்சிருந்தது எண்டதை மறைச்சு மாமாவின் பலவீனத்தை பாவிக்க கவலையா இருந்தது
"அப்ப சரி. நான் ஏத்தி வான்காரரிட்டை சொல்லியும் விடுறன் . நீ வவுனியவில கவனமா இறங்கி அண்ணையிட்டை சொல்லி ரயிலேறிப் போ. "
"சரி பிள்ளை அவங்கள் எதில வருவாங்கள் எண்டு தெரிஞ்சால் எல்லோ நான் அதில ஏத்த. முடியும் "
"அவங்கள் இப்ப வரயில்லை மாமா"
"ஏன்"
"அவங்களுக்கு அட்மிசன் வந்திட்டுது. ரெண்டு கிழமையில பிளைட் . அனேகமா இது தான் கடைசிப் பயணம் வீட்டுக்காரரோட நிண்டிட்டு வரட்டும். நான் போறன் எண்டு தெரிஞ்சால் ஒருத்தனாவது உடன கூட வருவான். இல்லாட்டி அனுப்பி விடுவினம். பிறகு நான் நீ எண்டு மற்றதுகளும் வெளிக்கிடும். புடுங்குப்பாடு வரும் . இது உச்சக் கட்ட நேரம் என்னோட யான பயணத்துக்கு அடிபட்டு அவங்களுக்குள் அந்தக் குடும்பங்களுக்குள் என்னால் எப்போதும் பிரிவினை வரவேண்டாம் . நான் தனியாவே போவன் .
மாமா நிமிர்ந்து முகத்தைப் பார்த்த்தார்.
"என்ன உச்சக் கட்டம் "
"நான் உச்சி வெயில் எண்டு சொன்னனான் "
ஒருகாலமும் இல்லாமல் அம்மாக்கும் சித்திக்கும் கூட ஆளுக்கொரு பொய் சொல்லி பிடிவாதமாக அங்கிருந்து வெளிக்கிட்ட பயணம் தான் இறுதிப்பயணம் என அப்போது தெரியாமல் இருந்தது எனக்கு.
இனி இந்த வாழ்க்கை தனக்கு நெருக்கமாக இப்படியான மனிதர்களைக் கொண்டிருக்கப் போவதில்லை என்பதுவும் . விக்கிரமாதித்தன் முதுகில் தொங்கும் வேதாளமாய் வாகாக முதுகில் ஏறி அமர்ந்து கொள்ள நேரத்துக்கு ஒரு கதை சொல்லி அழுத்தும் வேதாளங்களையே வாழ்வு சந்திக்கப் போகிறது என்பதுவும் இந்த வெகுளி நான் இவ்விடத்தில் இறந்து , வாழ்வை மனிதர்களைக் கற்றுக்கொள்ளப் புதிதாய் ஒரு ஜென்மம் எடுக்கப் போகிறேன் என்பதுவும் கூட எனக்கப்போது தெரியாமல் தான் இருந்தது.
அன்றைய பயணம் என்றும் போல் உற்சாகமாக
இல்லை. அடித்து மூலையில் போட்டது போலிருந்தது. தட்டிவானில் பயணித்த பாதையில் எதிராக மினிபஸ் பயணித்த போது எதிர்ப்பக்கமிருந்து ஒரு தட்டிவான் கடந்தது.
அது கடந்த பிறகும் ஜன்னலில் கன்னத்தை வைச்சு தலையைத் திருப்பிப் பாத்துக்கொண்டிருந்தன். எதிர்க்காற்றில் பறந்து வந்த பாலியாற்று மண் துணிக்கை கண்ணில் விழுந்திருக்கவேணும் போல, கண்ணைக் கரித்துக் கொண்டு உருண்ட ஒரு துளி தட்டிவான் போன பக்கத்துக்கு பறந்து கொண்டிருந்தது . கலங்கிய கண்களுக்குள் தட்டிவான் வண்ணங்களை இழந்திருந்தது.
# நினைவுகளிற்கு லில்லியின் குணம் #

Sunday, February 28, 2021

தட்டிவான் காதல் 3

 கடவுளே  அவங்களைத் தான் அடிச்சிருப்பாங்களோ . பிடிச்சு  இழுத்துக் கொண்டு போயிருப்பாங்களோ. மனம் பதறிக்கொண்டேயிருந்தது. கதவைத்திறந்து வெளியே பார்த்தால் தான் நிம்மதியாகும் எண்டாலும் உள்ளேயிருந்த யாரும் கதவு திறக்கத் தயாராக இருக்கேல்ல . வாயை கையால பொத்திக் கொண்டு முழி வெளியில வாறமாதிரி நிண்டார்கள் . கதவுக் கரையில போய் கதவோட காதை வைச்சு உன்னிப்பாக் கேட்டுக்கொண்டிருக்க,   கொஞ்சம் கொஞ்சமா ஆட்கள் நடமாடுறது  கேட்டது. மெதுவாக கதவை பலதரம் தட்டிய பிறகு , அங்கிருந்த கொஞ்சம் துணிவான பெண்  எவரின் ,எதிர்ப்பையும் காதில் வாங்காமல் கதவைத் திறந்தது  நிம்மதியா  இருந்தது. 

அவங்கள்  மூண்டு பேரும் உள்ளே வந்து ஒண்டும் பயமில்லை  யாரையோ தேடினம்  பயப்படாமல் இருங்கோ  என்றாங்கள்.   சாந்தமான அவர்களில் முகம், நிதானமான  குரலும் பண்பான கதையும் அங்கிருந்தவர்களுக்கு அவங்களில் ஈர்ப்பை  ஏற்படுத்தியிருக்கும் என்பது அவங்கள்  அந்த அறையில் எனக்கும்  அனுமதி வாங்கிய போதே நான் உணர்ந்து தானிருந்தேன்.  

அவங்கள் வெளியே போய் கதவை மூடுறதுக்கிடையில் என்னிடம் கிசுகிசுப்பாக  ,

 "பக்கத்து  அறையை தட்டித் திறந்து உள்ளே  போய் தேடினவங்கள். என்ன, யாரை  எண்டு தெரியேல்ல. இந்த அறைக்குள்ளும் வந்தாலும்  நீ  பயப்படாத . இந்த ஆட்களுடன் நில்  அவை வெளியே வந்தால்  நீயும் வா.  தனியா  உள்ளுக்குள்  நிண்டிடாதே."

"அப்ப  நீங்கள்  டா"  

"உன்னை விட்டிட்டு  எங்கேயும்  ஓட மாட்டம் . உனக்கது  தெரியும் இதில இல்லை எண்டால்  பயந்திடாதே. தேடி ஓடித் திரியாதே.. இங்கன தான் அமளி இல்லாத  வேறு பக்கத்தில நிப்பம்" 

"எனக்குத் தெரியும் "

"என்ன ?"

"என்னை அந்தரத்தில  விட்டிட்டு  ஓட மாட்டீங்கள்  எண்டது." 

கதவைச் சாத்தப் போனவன்  அந்த நேரத்திலும்  முகத்தை  ஊடுருவிப்  புன்னகைதான் . மற்றவனின்  கண் ஒருமுறை சட்டென ஒளிர்ந்தது.  கவனம் என்ன பயப்படாதை என்றான் மற்றவன்.

"ஹ்ம் ". 

அன்றைய  இரவில்  மூன்றுக்கு மேற்பட்ட தடவைகள்  அலறல்கள் கேட்டன . இரண்டு தடவைகள் வேறு வேறு அறைக் கதவுகள்  உடைந்து விடுவது போல தட்டப்பட்டன  மனிதர்கள் அதட்டப்பட்டார்கள். . அந்த அதட்டல்களும் தட்டல்களும்  இரவுகளில் கதவுகளை உதைத்துத் தட்டும் ,அதட்டும் ஆமிக்காரரை  நினைவு படுத்தின.  குடும்பத்தில் யாருமற்று தனியாக மாட்டுப் பட்டிருந்ததால்  அதிகம் பயம் வந்தது. அந்த இரவு முழுதும் அப்பிடியே தான் கழிஞ்சது. 

விடிந்தது .இரவு நடந்த அமளி பற்றிக் கதைக்க விசாரிக்க  யாரும் தயாரா  இருக்கையில்லை .இந்த இடத்தை விட்டு ஓடினால் போதும் எண்ட பதட்டம் தான் எல்லாருக்கும் இருந்தது   

சூரியன்' சுள் ' எண்டு முகத்தில் சுடத் தொடங்கிய பிறகு தான்  மறிச்சு  வைச்சிருந்த ஒவ்வொரு பஸ் ஆக  வெளிக்கிட  அனுமதி குடுத்தாங்கள்.  பல் தீட்ட, முகம் கழுவ  வேறு எது  செய்யவும்  எவரும்  தயாரா  இல்லை.  அந்த இடத்திலிருந்து ஓடினால் போதும்  எண்டமாதிரி  எல்லாரும் அவரவர்  பஸ் இற்குள் ஏறிக் கொண்டார்கள். 

அவங்களுக்கு  அதற்கு மேல் என்னை தனியாக அனுப்பும் துணிவு இருக்கயில்லை. நானும் அவங்களும் வந்தது  வேற வேற வாகனங்களாக  இருந்தபடியால், இவளும் இதில வர அனுமதிக்கச் சொல்லி தங்கட ரைவரை கனதரம் கெஞ்சிப் பார்த்தாங்கள் .  அவருக்கும் கூட்டிக் கொண்டு போக மனமிருந்ததை  முகம் சொல்லினது .  ஆனாலும் இப்பிடி வளியில தெருவில என்ன நடக்குதோ தெரியாது இங்க  பேர் குறிச்சு வைச்சு  அனுப்பிறாங்களோ  என்ன கோதாரி  விழுத்துவாங்களோ தெரியாது. பிறகு இந்தப் பிள்ளை ஆர்  புதிசா  எண்டு தொடங்கினால்  எல்லாருக்கும்  ஆபத்து  ராசா  எண்டார். 

வழியில்லாமல் கொண்டு போய்  நான் வந்த  வாகனத்தில் ஏத்தி , இனி ஒண்டும் நடக்காது  என்று ஆயிரம் தரம் சொல்லி. பின்னாலோ முன்னாலோ  தான்  நாங்கள் வாற பஸ் வரும். உனக்குக் கிட்ட தான் நிப்பம் எண்டு எனக்கு நம்பிக்கை குடுக்கிறதா  தங்களைத் தேற்றிக் கொண்டு   பாத்துக் கொள்ளுங்கோ  அண்ணை எண்டு  ரைவரின்  காலில்  விழாத குறையா  கையை பிடிச்சு கெஞ்சி  ஒருமாதிரி  ஏத்திப் போட்டு அவங்கள் போக , வாகனம் வெளிக்கிட்டு கொஞ்ச நேரத்தில பாத்தா, வரும் போது  நிறைஞ்சிருந்த சீட்களில்  மூன்றில்  ஆளில்லாமல்  இருந்தது. 

இரவு கேட்ட அலறலுக்குரிய  குரல்கள்  இவர்களாக  இருக்கலாம்.  இப்பிடி  வெறுமையாகிப் போன இருக்கைகள்  முந்திய  பிந்திய  வாகனங்களிலும்  இருக்கலாம் .  அழுகை  வந்தது. முடிவே  இல்லையா? முடியவே முடியாதா.? 

களைப்பு  மனப் பதட்டம்  நித்திரையில்லாதது  எல்லாம் சேர்த்து தானாகவே  நித்திரை வந்தது. 

ஆழ்ந்த  நித்திரையில் இருந்த போது ,இருந்தாப் போலை  துவக்கு முனையை பின் தலையில் வைச்சு அழுத்தின மாதிரி இருந்தது அந்தச் சத்தம்.   இடைவிடாத  அந்தக் ஹார்ன் சத்தம் . துடிச்சுப் பதை ச்சு எழும்ப, என்னைவிட துடிச்சுப் பதைபதைச்சுக் கொண்டிருந்தது பஸ் . எல்லாருக்கும் தெரிஞ்சாலும் எல்லாரும் அடுத்தவைக்குச் சொல்லுறது போல  ஆமிக்காரன் வாகனம் வருகுது  எண்டார்கள்.  ஜன்னல்  சீலையை  விலத்திப் பாக்க  கட்டிடமே இல்லாத காட்டுப் பாதையில் போய்க்கொண்டிருந்தோம். வந்ததும் ஒரு வாகனமில்லை  வாகனங்கள்.  விசர் பிடிச்ச மாதிரி  ஹாரன் அடிச்சுக் கொண்டு பேய்  பிடிச்ச மாதிரி சுட்டுக் கொண்டு, வெளியால  தலையை நீட்டி வெறி பிடிச்ச மாதிரி கோபமா ஏதோ பேசிக்கொண்டு ஒருவாகனம் கடக்க  அடுத்தவாகனம் இவ்வளவத்தோடும் கூட  சுடுவித்தையும் காட்டியது. 

அவங்களின்ட வாகனத்தை கண்டதும் , அந்தக் கிரவல் ரோட்டை விட்டு இறங்கி பத்தையோட பத்தையா  ஓடின  எங்கட வாகனம்,ஆமிக்காரன்  சுடத் தொடங்கினதும் ரயரில் குந்உ பட்டு  பட்டெண்டு  குலுக்கிப் போட்டு  கோணல்மாணலா  அசைவற்றுப் போச்சு.  ஒரு  சிலருக்கு கையில்  தோள் மூட்டில்  இரத்தம் வந்தது  அடுத்த வாகனங்கள்  வரக்குமுன்னம்  ஓடித்தப்பிப் போட வேணும்  ஓடுங்கோ  எண்டு சொல்லிக் கொண்டு  பாதிச் சனம் ஓட , என்ன செய்யிறதெண்டு தெரிமாமல்  எமளிச்சுக்கொண்டு காட்டுக்கை இறங்கி மீதிச் சனம்  ஓட, கண்டபாட்டுக்கு நானும் ஓடிப்போய் நடுக்காட்டுக்கை  நிண்டு பாத்தால்  எங்க நிக்கிறன் எண்டும் தெரியயில்லை. இனி  என்ன செய்யிறது எண்டும்  தெரியயில்லை. 

அவங்கள் நிண்டால் பயமே இல்லை  அவங்கள்  இல்லாமல்  இங்கு யாரை நம்புவது .  எண்டு நினைச்ச  நேரத்தில தான்  அவங்கள்  வந்த பஸ் இற்கும் இப்பிடி ஏதாவது  ஆகியிருக்குமோ  எண்ட எண்ணமும்  அவங்களுக்கு  ஏதாவது  நடந்திருக்குமோ  எண்ட பயமும் வந்தது.  வீதிக்குத் தெரியாத தூரத்தில ஒரு பாலை மரத்தில சாஞ்சு கொண்டு  சுத்திப் பாக்க, கூட  வந்த பலரும் பத்தைகளுக்குள்  பதுங்கியிருக்கிறது தெரிஞ்சது.

பத்தைக்குள் மறையிறதும் பிறகு எழும்பி  அவங்கள் எங்காவது தெரியிறாங்களா  எண்டு பாக்கிறதும், இங்கு  சூடு பட்டால்  யாருக்கும் தெரியாமல்  கிடந்து  அழுகிப் போவன்.  அம்மா  தேடி அலைஞ்சு கொண்டே ஒருநாள் செத்துப் போவா, விண்ணானம் விடுப்புக்கெண்டு அலையிற கூட்டம் கொழும்பில  ஆரோ சிங்களப் பெடியனோட  ஓடிட்டுதாம்  எண்டு என்ற கதைக்கு முடிவுரை  எழுதுவினம்  எண்டது   தவிர  வேற  எந்த நினைவும் அப்போது  இல்லை. 

ஆமி வாகனத்தின்ர சத்தம் மட்டும் அடிக்கடி கேட்டது.

கனதரம்  எட்டியெட்டிப் பார்த்தப் பிறகு   அவங்கள் மூவரில் ஒருவனின்  தலை மாதிரித்  தெரிஞ்சது. தூரத்தில.  அவங்கள்  எண்டால் ஒரு தலை தெரியாது  சேர்ந்து தான் ஓடி வருவாங்கள்  எண்டு நினைக்கும் போதே  மற்றவங்களின்ர தலையும் ஒவ்வொண்டா  தெரியத் துவங்கிச்சு.  ஆமி கீமி  எல்லாப் பயமும்   இல்லாமல்  போச்சு 

...............  எண்டு  ஒருத்தன்ர பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு  கையை உயர்த்தி  ஆட்ட , கண்டு கொண்டு கிட்ட ஓடி வந்தாங்கள்  

"நல்லவேளை  நீ எங்கே  எண்டு  பயந்தே போனன்."X

"எருமையை  கண்டப்பிறகு தான் நிம்மதி"Y 

"உனக்கு ஏதும் நடந்திருந்தால்  பிள்ளையை  இடைநடுவில  துலைச்சுப் போட்டியளே  எண்டு கொண்டிருக்குங்கள் வீட்டில"Z 

எண்டு  அவங்கள்  சொன்ன போது  

"எண்டாலும் எருமையளுக்கு என்னில  அக்கறை  தான் என்னடா "  

"இஞ்ச பார்  தயவு செய்து உன்ர திருவாயை மூடு  நேரங்காலம் இல்லாமல் பகிடி விடுறன்  பணியாரம்  சுடுறன் எண்டு வெளிக்கிட்டாய் , ஆமி கொல்லுறானோ இல்லையோ நான் கொண்டு போடுவன்"Y

"கொண்டு போட்டு போய் பார் கொம்மா  வாசலிலேயே  அடிச்சுக் கொல்லுவா ". 

"ஐயோ கடவுளே நேரகாலம் தெரியாமல்  எருமை ரெண்டும்  இடிபடுகுது  பார் "X

"இப்ப உனக்கு என்ன தெரிய வேணும்"Z 

"நாங்கள் இப்ப  எங்க நிக்கிறம் எண்டே  தெரியேல்ல "Y

"அட மொக்கா  இது தெரியாதே  உனக்கு"Z 

"உனக்குத் தெரியுமோ"X  

"தெரியாமல்  பின்ன"Z 

எனக்குக் குழப்பமாக  இருந்தது.  அவங்கள்  ஒரே  தலைமையின் பராமரிப்பில் வளர்ந்த , எந்த நேரத்திலும் எங்கும் பிரிந்திருக்காமல்  கவனிக்கப் பட்ட  பிள்ளைகள்.  உடன் பிறந்த  அண்ணன்  தம்பி கூட  அவங்கள் போல நெருக்கமாக இருக்க முடியாது என எண்ணப்படும் பிள்ளைகள். இதில் ஒருவனுக்குத் தெரியாத இடம் மற்றவனுக்கு  எப்பிடித் தெரியக் கூடும் எண்டு நான் பாத்துக் கொண்டிருந்தேன் .

"இது தெரியாதோடா  விசரா  இந்த இடத்தைத் தான்  சொல்லுறது  காடு எண்டு"Z

 . 

அடக்கமாட்டாமல்  கடகடவென்று சிரிக்கத் தொடங்கினேன்.

"அவர் பகிடிவிடுராராம். இவ அவரின்ர பகிடிய ரசிச்சு  சிரிக்கிறாவாம்.  வாயை  மூடு சனியன்  ஆமி வரப் போறான் ."Y

"டேய்  அங்கின  கல்லுக் கிடந்தால்  தூக்கி உந்த எருமையிண்ட  தலையில  போடடா. நேற்று  ஒரு கொடுமை  கடந்தாச்சு  அதாவது  ஊர்மனைக்குள்ள.  இண்டைக்கு  காட்டுக்குள்ள.  எங்க ஆமி நிக்கிறான் எதால போறது  எப்பிடிப் போறது  ஒண்டும் தெரியேல்ல.  இருட்டிறதுக்குள்ள இங்கயிருந்து எப்பிடியும் போகணும். எங்களுக்கு  என்ன நடந்தாலும் பிரச்சனையில்லை . இவளில துரும்பும்  பட்டிடக் கூடாது "X

என்று என்னைப் பார்த்துக் கொண்டு சொன்ன  முகம் கனிஞ்சிருந்தது. 

"ஏதோ உனக்கு மட்டும் தான் அக்கறை போல"Z 

அதுக்குள்ள  திரும்பவும் வெடிச்சத்தம்  கேட்டது.

 "பத்தைக்கு கல்லெறியப் பயந்தோடுற முயல் மாதிரி  சனம் வெளிக்கிட்டு  ஓடுது பார் ."

"பழமொழி கிழமொழி எண்டு உன்ர  மண்ணாங்கட்டி தமிழறிவை  காட்டினியோ கொலை விழும் இப்ப"Y

. முழியன் தன் பெரிய கண்ணை  இன்னும் உருட்டி முளிஞ்சான்  

நான் வாயை மூடிக் கொண்டேன் .  நாங்களும் தாறுமாறா  ஓடி  ரயில் பாதைக்கு  அருகா  ஓடிக்கொண்டிருந்தம். ரயில்பாதை  எங்காவது  ஒரு இடத்தில் வாகனப் போக்குவரத்துள்ள  வீதியைத் தொடும் எண்ட  நம்பிக்கையோடு.  

எங்களோடு கூடவே  மழையும்ஓ டிவந்து நனைச்சுக் கொண்டிருந்தது.  handbag தவிர  கையில்  எதுவுமில்லை கொஞ்சம் கொஞ்சமா  எங்களோட ஓடின மனிதர்களை நாங்கள் துலைத்துக் கொண்டிருந்தோம்.   வெயில் மங்கத் தொடங்கியிருந்தது. 

பசி, தண்ணிவிடாய் கொல்லத் தொடங்கினது.  

"போதும்  என்னால முடியல்ல  டா."

"இன்னும் கொஞ்சம் ஓடிப் பாப்பம் " Y

"ஓடி நாங்கள்  ரோட்டில  ஏறிற  இடத்தில ஆமி நிண்டால் "

"ஏன் அப்பிடி நினைக்கிறாய் நிக்கமாட்டான் "X

"அவள்  சொல்லுறது போல நிண்டால்  என்னடா  செய்யிறது"Z

"நீ வேற வாயை வைச்சுக் கொண்டு சும்மா இரு பாப்பம்"Y

"இருமுறாள் டா."X

"தொடர்ந்து மழை நனைஞ்சால்  வேற என்ன செய்யும்  போதாதுக்கு வழியில கிடந்த  கிழாத்தி , காரை, சூரை எண்டு ஒரு காயும்  மிச்சமில்லை  எல்லாம் உருவி  வாயில போடக்கையே  சொன்னனான்  கயர் இருமும் எண்டு. கேட்டாத் தானே "Y

"நேற்று வெளிக்கிடேக்க  சாப்பிட்ட  சாப்பாடு இப்பவரைக்கும் ஒண்டுமில்லை பசிச்சால்  அவள் வேற என்ன செய்யிறது"X

"நீ அவளுக்கு  வக்காலத்து  வாங்கிறதே  தொழிலா  கொண்டிரு."Z

"எருமை இந்த இடத்திலும்  மழைக்கு  அண்ணாந்து கொண்டு நிக்கிறாள்  பார். "Y

"அவள்  வழமை மாதிரி மழையில ஆசைப் பட்டு   அண்ணாரயில்லை"Z

மழைத் துளிகள் முகத்திலும்  சில துளிகள்  வாய்க்குள்ளும் விழுந்தது  கொஞ்சம் இருமல் குறைத்தன. 

 அவங்கள்  கைகளுக்குள்  மழையை   ஏந்திக் கொண்டிருந்தாங்கள் . 

மூண்டு முறடு தண்ணி  வாய்க்குள்  போயிருக்கும் கொஞ்சம் உற்சாகம் வந்தது.

"என்னடி  செய்யுது மயக்கம் வாறமாதிரி  ஏதுமிருக்கா."Z 

அவர்கள் முகங்களில் கவலையும்  பதட்டமும் அப்பிக் கிடந்தது. 

"ம்  நான் ஒகே  போவம். "

"நடப்பியா" X

அவங்கள் என்னால்  பதறிக்கொண்டிருப்பது கவலையாக இருந்தது. அவர்களைச் சிரிக்கவைப்பது அப்படியொன்றும்  சிரமமில்லை எனக்கு 

"எனக்குப் பாடவேணும் போல இருக்குடா" 

அவன் கொலைவெறியுடன் பார்த்தான்  

"என்ன பாடவேணும் உனக்கு "X 

"ஒரு சின்னப் பறவை அன்னையைத் தேடி வானில் பறக்கிறது." 

"எரும சின்னப் பறவை  எண்டு பாடாத. பத்தொன்பது வயதுக் கிழட்டுப் பறவை  எண்டு பாடு"Y 

"சரி   நீ சொன்னமாதிரி வானத்துக்குக் கேக்கப் பாடட்டே"

"பாடு  ஆமிக்காரன் வந்து  குதறிப் போட்டுப் போவான்"Z

சிரித்தோம்   

"சரி ஓடாமல்  நடப்பம் என்ன  கனநேரமா துவக்குச் சத்தம் எதுவும் கேக்கயில்லை."Z

"கேக்காத தூரத்தில நிக்கிறமோ  தெரியா"X

"பசிக்கேல்லையாடா  உங்களுக்கு"

"பசிக்காமல்  இருக்கோ பேசாமல் வா"Y

"டேய்  நாங்கள்  எங்க நிக்கிறம் எண்டு  எனக்குத் தெரிஞ்சு  போச்செடா"

.

"சேட்டை விடாத  களைப்பா  இருக்கு. பேசிப் போடுவன்"Y

"அங்க பார்  ரயில் பாதைக்கு  அந்தப் பக்கமா  தூரமா  தெரியுது பார்  அது தான் கெமிக்கல் கொப்பிறேசன்  இருந்த  இடம்.  இனி எனக்கு  இடம் தெரியும் எந்தப் பக்கத்தால திரும்பினால்  ரோட்டுக்கு  உடன போகலாம் எண்டும் தெரியும்."

"ஆமி  வந்தால்.  ஆரெண்டு  கேட்டால் ...."Z

"அவங்களின்ர  கண்ணில படாமல் எதால  எல்லாம் போகலாம் எண்டு எனக்குத் தெரியும். நான் குழந்தையில இருந்து  தேடிவந்து காடலைஞ்ச இடமெடா இது "

"இனி இந்தப்பக்கமா  நடக்கக் கூடாது  வாங்கோ குறுக்கால நடந்து ரோட்டைக் கடந்து மற்றப்பக்கமா நடப்பம்."Y

"பிறகு இதிலையிருந்து வேற வில்லங்கம் தொடங்கினாலும் தொடங்கும்"X

குறுக்க  நடந்து  ரோட்டைக் கடந்து  கனதூரம் நடந்து ரோட்டுக்கு ஏற  ஒன்றிரண்டு மினிவான்  கடந்தது.  காட்டுப் பாதையில  நிண்டு கைகாட்டினதாலேயோ  என்னவோ  ரெண்டுக்கும் எங்களை ஏத்த மனமில்லை. 

கன நேரத்துக்குப் பிறகு  நல்ல   சலங்கை  கட்டின வண்டில் காளை மாதிரி  வந்தார்  பாருங்கோ  நம்மடை  ஆள் .......

உயிரைக் கையில பிடிச்சுக் கொண்டு நாளைக்கு  அவரில பயணிச்சு  முடிப்பம் .......... 

Friday, February 26, 2021

தட்டிவான் part 2

 அதற்குப் பிறகும், அடிக்கடி எங்கும் காணமுடியாத, எப்போதாவது  எங்காவது  தற்செயலாக தட்டிவானைக் காண நேர்கையில் , அதைப் பார்த்து ஏமலாந்திக் கொண்டு நிற்கும் போது இதில ஒருநாள்  ஏறி, காற்றும்  இலை தலைகளும் முகத்தில்  உரச, காட்டு வழியில் நீண்ட தூரம் போகவேண்டும்  என்ற ஆசை எழும். 

பிறகு, வௌவால் கூட்டம் தொங்கும் மவுக்குனி (மஹோகனி) மரத்துக்கு  நடு இரவில் வெடி கொளுத்திப் போட்ட மாதிரி , ஷெல்லுக்கும் , குண்டு, வேட்டுக்கும்   சிதறி ,சிதறியோடி  ஒவ்வொரு முறையும்  ஒவ்வொரு இடங்களில்  வௌவால்  மாதிரித் தொங்கிக் கொண்டிருந்த  காலங்களில்  வாகனப் போக்குவரத்தே  அருகிப் போனது.  உயிரைப் பிடித்து வைத்தல் முக்கியமாகிப் போயிருந்ததில், கலைந்து போன பல ஆசைகளுடன்   தட்டி வான் நினைவும்  காணாமல் போயிருந்தது. 

அன்று அடம் பிடித்து, மேலதிகாரிக்கு முன்னால் சிங்களத்தில் ஒற்றை காலில்  நின்று  லீவு பெற்று  கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் பயணம் செல்லும் பாதி வழி வரை. 

போக்குவரத்து  ஆபத்தும் பதட்டமுமாக இருந்த 

 அந்த நேரத்தில், யார் தடுத்தும் கேளாமல்   அப்படிப் பிடிவாதமாக  யாழ்ப்பாணம் போவதற்கு முக்கியமாக ஒரு காரணம் இருந்தது. "உன் கல்யாணத்துக்கு கட்டாயம்  நான் வருவேன்"    எனறு  என்றோ ஒருநாள்  கொடுத்த வாக்குறுதி ஒன்றை நிறைவேற்றி  என் அன்பை  உறுதி செய்ய வேண்டும்  என்ற தீர்மானம் அன்றைய பயணத்துக்கான  ஒரே காரணமாக  இருந்தது . 

வழமை போலத்தான்  அன்றும் அந்தப் பயணத்தின் ஆரம்பம் இருந்தது. வவுனியா  வரை.  வவுனியாத் தரிப்பிடத்திலிருந்து வெளிக்கிட்டதும்,   அதுவரை  ஜன்னல்  கண்ணாடியூடாக  நகரத்தை  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த  நான் ஜன்னல் திரையை  இழுத்து  மூடி விட்டு  சீற்றை பின்பக்கமாகச் சரித்து, கையில் கிடந்த புத்தகத்தை விட்ட இடத்திலிருந்து  வாசிக்கத் தொடங்கினேன்.  

ஒரு அத்தியாயம் கூட முடிந்திராது  வழமைக்கு  மாறாக வேறோர்  இடத்தில்  பஸ் நிறுத்தப் பட்டது.  மெதுவாக  எழுந்த சலசலப்பு  நேரம் போகப் போக  அமளிப்பட்டது. அந்த இடத்தில்  இராணுவ முகாம்  இல்லை  என்பது  எனக்கு முதலே  தெரிந்திருந்ததால்  பதட்டம் ஏதும் எழவில்லை.  ஆனாலும் குழப்பமாக இருந்தது. 

"எதுக்காம் நிப்பாட்டினவை"  என்றேன்  

எழுந்து  நின்று வெளியே  எட்டிப்பார்த்த பலரில்  ஒருவரிடம்.  

"செக் பண்ணப் போகீனமாம்.  இறங்கக் கிறங்க விடாமல்  வாசலை  அடிச்சுக் கொண்டு நிக்கினம்"  என்றார்.  ஆமிக் காம்போ செக் பொயின்ரோ இங்கன இல்லையே  என்று வாய்வரை  வந்த வார்த்தையை  அடக்கிக் கொண்டு  புத்தகத்தில்  கண்ணையும் என்னைச் சுற்றி காதையும் கொடுத்துக் கொண்டிருந்தேன்.  நேரம் மணித்தியாலங்களாகக் கடந்தது. 

இருந்தாற்போல் பொதுபொதுவென்று  ஒரு கூட்டம்  உள்ளே  ஏறியது  அவர்கள் ராணுவ உடை  அணியாதவர்களாக  இருந்தார்கள்.  இலங்கைத்தமிழில்  கதைத்தார்கள்  எம்முடையவர்கள் என்று உணரமுடியாத  அந்நியமும்  அதட்டலும் அவர்கள்  குரலில்  இருந்தது.  

ஒவ்வொரு  சீற்றுக்கும்  அருகில் வந்து ஆமிக்காரன் மாதிரி  முகத்துக்கு ரோச்  அடித்து  ஐடன்ரிக் காட்டை வாங்கி  முகத்தை  கூர்ந்து கூர்ந்து  பார்த்தார்கள். 

பார்த்து முடிய இறங்கிப் போய்  யாரும் வாகனத்தை விட்டுக் கீழே இறங்கக் கூடாது  என சத்தமாகக்  கத்தினார்கள்.  

ஆமிக்காரனுக்கு  மட்டுமல்ல  ஆயுதம் தூக்கின  எல்லாருக்கும் அடங்கி ஒடுங்கி வாழ்வதற்கு  பேசாமல் செத்துப் போகலாம் என  அடிக்கடி தோன்றும் நினைப்பு 

அப்போதும்  வந்தது. எப்போது  போக விடுவார்கள் என்பது தெரியாமல்  கோவில் வாசலில்  வரத்துக்குத் தவமிருக்கும் பக்தனைப் போல காத்துக் கிடந்தது  பஸ் . அதற்குள் நாங்கள்  தவமிருந்தோம்.

மணித்தியாலங்கள்  கரைந்தன.  இருட்டுவதற்குள்  கிளிநொச்சி  கடந்து விடலாம் என்று  கணிப்பிட்டுப் புறப்பட்ட தனிப்பயணம், இருட்டத் தொடங்கிய போது  பயம் தந்தது. 

எழுந்து போய் ரைவரிடம் "எப்ப அண்ணா  வெளிக்கிடுவியள்"   என்றேன். அவர் கண்களில்  கலவரத்துடன் வெளியில்  பார்த்தார்.   கூட்டமாக  வாகனத்தின் வாசலடியில் நின்றவர்களில் ஒருவரோ சிலரோ  திரும்பிப் பார்த்தார்கள்.  

"ஏன்" என்றார்கள். 

அந்த அதட்டல்  தொனி சுர் என்றது   

ஆயுதம் கையில்  இருக்கும்  மிதப்பு  அநேகரின் தொனிகள்  அப்போது அதிகாரமாகவே  இருந்தன.  இவர்களதும்  அப்படித்தான் இருந்தது. 

"ஏனென்டால்  எண்டால்  வாகனம் வெளிக்கிட்டால்  தான் வீட்டுக்குப் போய்  சேரலாம்  அது தான்".  

"வாகனம்  இப்போதைக்கு  வெளிக்கிடாது" 

"ஏன்"

"அலுவலிருக்கு"

அதற்கு மேல் அவர்களிடம் கேள்வி கேட்டு  அவர்களின் வெட்டிப் பிடுங்கிற  பதில் கேட்கப்பிடிக்கவில்லை. 

பொத் தென்று சீட்டில்  சாய்ந்து  புத்தகத்தை விரித்து  முகத்தை மூடிக் கொண்ட  சற்றைக்கெல்லாம்

"வாகனம் இண்டைக்கு இதுக்கு மேல போக முடியாது  திருப்பு"  என்ற  அதட்டல் சத்தம்  வந்தது. 

எங்கே போகிறோம் என்பது கூட ச் சொல்லாமல் இருவர் வாகனத்தில் ஏறி வழிகாட்டி  எதோ கைதிகளை அடைத்துக் கொண்டு போய்  இறக்கிய மாதிரி  ஒரு மஞ்சள் பெயின்ற் அடித்த கட்டிடத்தின் முன்னால் இறக்கினார்கள்.

அது வவுனியா  இந்து கலாச்சார மண்டபம் என்ற பெயரைக் கொண்டிருந்ததாக  இன்று ஞாபகம். 

அங்கு கொண்டு சென்று இறக்கிய பின் அங்கு குவிந்திருந்தவர்களைப் பார்த்த போது தான்  தெரித்தது அள்ளி  அடைத்துக் கொண்டு வந்து கொட்டியது  எங்களை மட்டுமில்லை  என்பது. 

இங்கு எப்படித் தங்குவது.  யாரை  நம்புவது என்ற பதட்டம்  வந்தது  

அதற்குள்  அங்கு கிடந்த சில அறைகளுக்கு  அவசரமாக கட்டணம் வசூலிக்கத் தொடங்கியிருந்தார்கள்.  அதுவும் ஒரு இரவுத் தங்கலுக்கு வசூலிக்கப் பட்ட  கட்டணம்  அந்த ஏசி இணைத்த  சொகுசு  வாகனத்தின்  கொழும்பு யாழ் கட்டணத்தை விட  அதிகமாக  இருந்தது. 

அங்கிருந்த  ஒரு சில  அறைகளில்  பெண் பிள்ளைகளைத் தங்கவைத்துவிட்டு  வெளியே ஹாரிடாரில்  ஆண்கள்  இருக்கலாம் என அங்கிருந்த பயணிகளால்  அவசரத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது .  

அப்போது தான் பல அப்பா வயது வசதி வாய்த்த  ஆண்களுக்கு  அவசரமாக  நோய்கள்  அணிவகுத்தன. தங்களுக்குத் தூக்கம்  கட்டாயம் என்றும் தனி அறை  வேண்டும் என்றும் இரு மடங்கு தாள்களை  துப்பாக்கிக் காரரிடம்  நீட்டிக் கொண்டு  கூட்டத்திலிருந்து தம்மை அன்னியப் படுத்தி  ஒதுங்க முயன்றார்கள்  

அங்கு கட்டணம் கொடுப்பதோ  தங்குவதோ என்பதைத் தவிர்த்து  அறிமுகமில்லாத  இந்த மனிதக் கூட்டத்திலிருந்து  என்னைப் பிரித்துக் கொண்டு  எப்படி  வெளியேறுவது .  துப்பாக்கிகளோடு அதிகாரம் செய்யும் இவர்கள்  எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.  என்ற குழப்பம்  இருந்தது  எதைச் சேர்ந்தவர்கள் என்றாலும்  அவர்கள் நடத்திய முறையில்  அவர்களை  நம்பத் தயாராக  இருக்கவில்லை  மனது.  ஆமியைப் போலவே அவர்களையும் அந்நியமாக  எண்ணியது. 

அங்கு தங்கவைக்கப்பட்டு  அன்று இரவு ஏதோ விரும்பத்தகாதது  நடக்கப் போவதாக  மனம்  சொல்லியது . அதற்கு முகம் கொடுக்க நேராமல் வெளியேறி விடவேண்டும். வவுனியா  முழுப் பிரதேசமும்  அறிமுகமில்லையாயினும்  நகரப்பக்கம்  அறிமுகமானதாகவும் , இதற்குள் இருந்து வெளிக்கிட்டால் பாதுகாப்பாகத் தங்குவதற்கு ஏற்ற  மனிதர்கள்  இருந்ததாலும்  இதை விட்டு வெளியேறுவது ஒன்றே முக்கிய எண்ணமாக இருந்தது. 

அப்போது அது ஒரு மாடி கொண்ட கட்டிடமாக  இருந்ததாக  ஞாபகம். கொண்டு வந்து குவித்த  அனைவரையும்  மேலே அனுப்பி விட்டு அவர்கள் கீழே  உலாத்திக் கொண்டிருந்தார்கள்.  துப்பாக்கி 

தூக்கினால் எல்லாருக்கும்  இயந்திரத் தனம் வந்திடுமோ  என்னவோ  எல்லாரும் விறைத்த கடும் ரோபோக்கள்  மாதிரித்தான் நடந்து கொண்டிருந்தார்கள். 

இவங்ககிடமிருந்து  எப்படி வெளியேறிப் போவது  என்று தடுமாறிக் கொண்டு, போரில்லாத காலத்து  நல்லூர்  தேர்காலக் கூட்டம்  போல அந்தச் சிறு கட்டிடத்தை நிறைத்திருந்த கூட்டத்தில்  நின்ற போது,  பரீட்சயப்பட்ட  அந்தக் குரல் கேட்டது .  நிமிர்த்து அந்த முகங்களைக் கண்ட போது  நிம்மதி வந்தது. 

இனி சாவு வரலாம்,  ஆனால் வேறெதுவம் நிகழாது.  நிகழ விடமாட்டாங்கள்  என்ற  நிம்மதி வந்தது. 

கூட்டத்தில் இடறி மிதந்து பக்கத்தில் வந்து கொஞ்சமா  நிலையை  பகிர்ந்து கொண்டபோது,  

"எதுக்காக  இதுக்குள்ள கொண்டு வந்து  வைச்சிருக்கிறாங்கள்  எண்டு  தெரியேல்ல  வெளியே போக நினைக்காதே.  என்ன செய்வாங்களோ தெரியாது.  நாங்கள் இருக்கிறமெல்லோ பயப்படாதே" என்றார்கள். 

அதை அவர்கள் வார்த்தையாகச் சொல்லியிருக்கத் தேவையில்லை. 

"பொறு ஏதாவது ஒரு ரூமில்  இடம் பிடிச்சுத் தாறம்."   என்று ஒவ்வொரு  அறையாக நுழைந்து  கதைத்து கால்மணி நேரத்துக்குள் இரவு ஒதுங்குவதற்கு  ஒரு அறைக்குள்  இருந்த எட்டுப் பேருடன் ஒன்பதாவதாக  என்னையும் இணைக்க  அனுமதி வாங்கிக் கொண்டார்கள். 

"நீ உள்ளே  பூட்டிக் கொண்டு  இவர்களுடன்  தங்கு  இங்கு  ஏன்  அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று தெரிவில்லை.  என்ன நடக்கப் போகுது என்றும்  ஊகிக்க முடியவில்லை. அதனால் நித்திரை கொள்ளாதே.  நாங்கள் மூண்டு பெரும்  நீ இருக்கிற அறைக் கதவு  வாசலில  தான்  சுவர்க்கரையில இருப்பம்.  ஏதும் வில்லங்கம் மாதிரித் தெரிஞ்சால்  கதவில  தட்டுவம்  திறந்து கொண்டு  எங்களிட்ட  வந்திடு  என்ன.  கவனம்.  பயப்படாதே . "

"ம் "

  என்று சொல்லிக் கொண்டு உள்ளே போனாலும் அங்கும் குழப்பமும் பதட்டமும் அடங்காமல்  இருந்தது.  அந்த அறையில்  வழமையாக  கூட்டம் நடப்பதாக இருக்கக் கூடும்  நீள் சதுரமாய்  ஒரு மேசை இருந்தது  நாங்கள்  அதைச் சுற்றி  சுவர்க் கரைகளில்  அமர்ந்து கொண்டோம் .  அனேகமாக  அனைவரும் இளம் பெண்கள் என்பதால்  கொஞ்சம் கொஞ்சம் நட்பாகிக் கொண்டோம் 

அவங்களை  வெளியே விட்டு விட்டு  உள்ளே பாதுகாப்பாக இருப்பது  என்னமோ போலிருந்தது.  வெளியே இருக்கும் ஆண்களை  இரவு சுட்டு விடுவார்களோ  பிடித்துச் செல்வார்களோ  என்ற குழப்பம் வந்தது .  இந்த இரவே வெளியே இருக்கும்  அவங்களுக்கு  ஏதும்  ஆகி  விடுமோ.   அப்படி நடந்தால்  அதை அவர்கள் வீட்டில்  நான்  எப்படிச் சென்று  சொல்ல முடியும்  இங்கு அடைத்து  வைத்திருப்பவர்களுக்கும்  ஆமிக்காரனுக்கும்  தொடர்பிருக்குமோ   மனம் நிலையற்றுக் குழம்பியது 

நடு இரவில்  திடீரென்ற  அலறலில் உயிர் நடுங்கியது  தமிழ்  அதட்டல்,   தமிழ்  அலறல்  ஒன்றாய் இரண்டாய் மேலுமாய்  ஓலமாய் ...........

தட்டிவானை நாளை  பார்ப்போம் .................  

தட்டி வான்

வாழ்வில் எதிர்பார்த்தேயிராத சிலவற்றுக்கு நினைவுகள் முக்கியத்துவம் கொடுத்து விடும். சம்பந்தப்பட்ட அதை எப்போது எங்கு காண்கிறோமோ உணர்வுகள் உடைப்பெடுக்கும் . இன்று ஒரு நட்பின் பதிவில் தட்டிவானைக் கண்டேன். கடந்தவைகளைக் கடந்து போக முடியவில்லை.
எல்லோருக்கும் பிளைட்டில் போக ஆசை வரும் உயர்ரக சொகுசுக் காரில் போக ஆசை வரும் ரயிலில் கப்பலில் போக ஆசை வரும் . எனக்கென்னவோ அந்த காஸ்ட்லியான ஆசை எல்லாம் எப்போதும் இருந்ததில்லை. தட்டி வானில் போக வேண்டும்
தட்டிவானின் பின் பக்கத்தில அரைவாசி திறந்தபடி இழுத்துக் கொழுவுற அந்தத் தட்டிப் பலகையில இருந்து கொண்டு ஒற்றைக் கையில வானின்ர மேற்பக்கத்தைப் பிடிச்சுக்கொண்டு காத்து முகத்தில மோதி தலைமுடிஎல்லாம் பறக்க பயணம் செய்ய வேணும் அல்லது தட்டி திறந்து தட்டையா கொழுவியிருக்க வானின்ர கூரையைப் பிடிச்சுத் தொங்கிக் கொண்டு பயணம் செய்யவேணும் எண்ட பெரிய ஆசை எனக்கு அப்போது .
இந்தத் தட்டிவான் ஆசை தொடங்கினதென்னவோ வல்லிபுரக் கோவில் கேணியடி மடத்து வாசலில தான். அப்போது இந்தப் போரெல்லாம் மனத்தைக் குதறி எடுக்காத என் சிறுபிள்ளைப்பிராயத்தில வழமை போல வல்லிபுரக் கோயில் தேர்த் திருவிழாவுக்குப் போயிருந்தோம். அம்மாவழித் தாத்தா ஒருவர் தேருக்கு அன்னதானம் வைக்க தட்டிவான் பிடிச்சு பெரும் சமையல் பாத்திரம் பண்டம் எல்லாம் அதுக்குள்ள அடைஞ்சு கொண்டு வந்து சேர்ந்திருந்தார்.. அண்டைக்குத் தான் நான் தட்டிவானை எனக்கு நெருக்கமா கண்டதெண்டு நினைக்கிறன்.
அம்மாவையள் எல்லாம் அமளிதுமளியா சமைச்சுக் கொண்டிருக்க அந்த வெக்கைக்குள்ளும் இடைச்சலுக்குள்ளும் ஓடிப்பிடிச்சு விளையாடின எங்களைப் பிடிச்சு வெளியால மண்டபத்தில இருத்தி எங்கேயும் போகக்கூடாது கால் கையை வைச்சுக் கொண்டு சும்மா இருக்க வேணும் எண்டு இருத்தி விட்டிச்சினம். எவ்வளவு நேரத்துக்குத் தான் நல்ல பிள்ளையாவே நடிக்க முடியும் கால் கை விறைச்சுப் போயிடும் எண்டு போட்டு மெதுவா அந்த இடத்தை விட்டு வெளிக்கிட்டிட்டம்
கோயிலுக்கு எந்தப் பக்கமா போனம் எண்டு தெரியாது . ஆனால் நடக்க நடக்க தூ ...ரமா வானம் இறங்கி நிலத்தை தொடுறது போல இருந்திச்சு கூட வந்தவங்களில் ஒருத்தன் சொன்னான் பூமி வட்டம் அது தான் வானம் வளைஞ்சு தெரியுது பாத்தியோ எண்டு. அப்பவெல்லாம் எனக்குப் பிடிச்ச எல்லாருக்கும் என்னை விட கனக்கத் தெரியும் எண்டு நினைக்கிற அதை அப்படியே நம்பிற அறிவாளி நான். அந்த வானம் வளைஞ்சு பூமியை தொடுற இடத்தை பார்க்க வேணும் எண்டு தான் நாங்கள் ஆவலா நடக்கத் தொடங்கினம்.
கால் புதையிற குறுமணலும் கொதி வெயிலும் இப்ப நினைச்சாலும் ஏனோ அப்பளம் ஞாபகம் வருகுது. அந்தப் பொரிவிலும் அந்த வெள்ளை மணல் மீது இருந்த மோகம் இப்பவும் நினைவில் இருக்கு. கால் சூடு தாங்க முடியாமல் பொத்தெண்டு கீழே இருந்து காலைத் தடவப் போட்டு தடவாமல் பின் பக்கத்தைத் தடவிக் கொண்டு துடிச்சு எழும்ப எங்களில் மூத்தவன் சொன்னான். கால் வெந்து போகும் தாங்க மாட்டாய் முதுகில ஏறு நான் உப்புமூட்டை சுமந்து கொண்டு ஓடுறன். அவங்கள் பின்னால ஓடி வருவாங்கள் எண்டு.. இல்ல எல்லாருக்கும் தானே சுடும் . எல்லாரும் ஓடுவம் என்று சொல்லிக்கொண்டு ஓடத் தொடங்கினம். கால் கொதிச்சாலும் தெரியாத இடத்தில் யாரின்ர அதிகாரமும் இல்லாமல் ஓடுவது நல்லாத்தான் இருந்தது எங்களுக்கு.
நாங்கள் ஓட ஓட நிலத்தைத் தொட்ட வானம் எட்டவே இல்லை. கடல் தான் வந்தது. கடற்கரையில நிண்டு பாக்க . கடலுக்குத் தூரமா வானம் வளைஞ்சு கடலைத் தொட்டு பூமி உருண்டை எண்டு சொன்னது. ஆனாலும் எங்களுக்கு அப்ப அதில ஆர்வம் போயிருந்தது. வெள்ளையா தூய்மையா அந்தக் கடற்கரையும் பெரிசு பெரிசா எழும்பி வேகமா வந்து மோதுற அலையும் பெரிய அதிசயமா இருந்தது
ஒரு முறை பெரும் அலை மோதி திரும்பிப் போகேக்குள்ள எங்களையும் இழுத்துக் கொண்டு போய் பாதியில மண்ணில விட்டிட்டுப் போகும் போது தான் முழுக்க நனைந்த படி இந்த உலகத்தின் சந்தோசம் எல்லாம் திரட்டி சத்தமா சிரிச்சபடி அப்பிடியே மண்ணுக்கை குப்புறப்படுத்துக் கொண்டு அடுத்த அலை வந்து வழுக்கிக் கொண்டு இழுக்கிறதுக்காகக் காத்துக் கிடக்கேக்க தான் பார்த்தம். குட்டிக் குட்டியாய் ஏராளம் சிப்பி சோகி எல்லாம் அலையோட வந்து சர் எண்டு ஈரமண்ணை துளைச்சுக் கொண்டு உள்ள போறதை .
வெள்ளை வெள்ளையா மினுங்க மினுங்க சிப்பி சோகிகள் அதில கருப்பும் மண்ணிறமுமா புள்ளிகளும் கோடுகளும். எங்களுக்கு கடல் முத்தைக் கண்டதை விடப் புழுகம் . கடல் ஆர்வம் ரெண்டாம் பட்சமா போச்சு. ஒவ்வொரு அலைக்கும் காத்திருந்து அது கொண்டு வந்து குவிச்சுத் தள்ளுற இந்த அழகுக் குவியலை ஓடியோடி பொறுக்கத் தொடங்கினம். நாங்க பொறுக்கி எடுத்ததும் அது அசைவற்றுப் போனது. இதெல்லாம் தொட்டு விளையாடக் கிடைச்ச முதல் அனுபவம் அத்தனை சந்தோசம் தந்ததில நேரம் என்று ஒன்று இருக்கிறதும் எங்களுக்கு குடும்பம் இருப்பதும் அது தேடும் என்பதும் எல்லாமும் எங்களுக்குத் தெரியவே இல்லை. அதிலும் பேருக்குக் கூட மனித சஞ்சாரமில்லாத அந்த உலகத்தில் நாங்களே அனைத்துமா இருந்ததில் எல்லாமும் மறந்து போயிருந்தது.
இருந்தால் போல ஆர் நீங்கள் எல்லாம் இதில ஒருவரும் வரக் கூடாது என்னண்டு வந்தனிங்கள் எண்டு கேட்ட மனுசன் எங்களுக்கு அரக்கன் போலிருந்தார் பயம் வந்தது . ஆளையாளை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கினம். ஆனாலும் மறக்காமல் நாங்கள் அள்ளிவைச்ச கிளிஞ்சல் எல்லாத்தையும் அவங்கள் வேட்டிக்குள்ள போட்டிருந்த காச்சட்டை பொக்கற் முட்ட முட்ட அடைச்சு கொண்டும் நான் போட்டிருந்த பட்டுப்பாவடையை சண்டிக் கட்டுப் போல மடிச்சு அதுக்குள்ள நிறைச்சுக் கொண்டும் ஓடி வந்தம்.
அந்த ஆளைக் கண்ட பயம் இன்னும் இருந்தது . இங்கன தனியாத் திரிஞ்சால் கொலை கிலை செய்து போடுவாங்கள் எண்டு சொன்னது அவரே கொலை செய்வார் போல பயமா இருந்ததில எங்களுக்கு இப்ப மணல் சூடு பெரிசா தெரியயில்லை. எல்லாருக்கும் அம்மாமார் நினைப்பு வந்தது அழுகை வந்தது.
எங்கள் எல்லாரிலும் பெரிய , செய்திப்பேப்பர் . வாசிக்கிறவன் சொன்னான். இந்தக் கடற்கரையில தான் கமலத்தை கொண்டவங்கள் எண்டு அது நாம் கொலைகள் பற்றி அறியாத காலம் கொலைகளை சினிமாப் படங்களில் மட்டுமே கண்ட காலம் . அதால , கொலை நடந்த எல்லாத் திரைப்படமும் கண்ணில வந்து போச்சு . உதிலையோ கொலை நடந்தது கேட்டுக் கொண்டே கொலைகாரன் துரத்துவது போல ஓடத் தொடங்கினம். அவன் எங்களுடன் ஓடிக் கொண்டே தன் அதிமீதாவித் தனத்தை பெருமைப்படுத்த கமலம் பற்றி கொலை பற்றி சொல்லிக் கொண்டே ஓடி வந்தான். சாவுப்பயத்தில் எங்களுக்குத் தூரம் தெரியவில்லை.
நிலத்தோட ஒட்டின புல்லும் நெருஞ்சியும் காலை பதம் பாத்தபிறகு தான் அண்ணாந்து பார்த்தம் கோயில் வந்திருந்தது . அம்மாவையள் இருந்த மண்டபம் தெரியாமல் தடுமாறிக் கொண்டு நிண்டம் வீட்டுக்காரர் கோயிலில ஒரு இல்லை பல செத்தவீடே நடத்தி முடிச்ச நிலையில நிண்டிச்சினம் கண்ட உடன கட்டிப்பிடிச்சுக் கொஞ்சினதோட சரி ஒதுக்கமா இழுத்துக் கொண்டு போய் சுலரச் சுழர சப்பல் அடி.
எங்களை பட்டி அடைச்சது போல ஒண்டா மூலையில் இருத்தி காவலுக்கு ஆளும் வைச்சுப் போட்டு மத்தியானப் படையலுக்கும் அன்னதானத்துக்கும் தொடங்கின சமையலை பின்னேரம் சமைச்சினம். அந்த நேரத்திலும் நாங்கள் கடலில இருந்து கொண்டு வந்த பொக்கிசத்தை எங்களுக்குள்ள மறைச்சுத் தான் வைச்சிருந்தம் . அது வேற எங்களில என்ன வஞ்சம் வைச்சிருந்ததோ எங்களை இருத்தியிருந்த சாமான் அடுக்கியிருந்த மூலைக்குள்ள நாங்கள் ஒழிச்சு வைச்ச இடத்தில இருந்து முனகல் போலவும் கீச்சிடல் போலவும் சன்னமா சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. , அவசரமா அன்னதானத்தை முடிச்சுக் கொண்டு வெளிக்கிட்டீனம் .
இருண்டு போயிருந்தது. வழமைபோல பஸ் வான் எண்டு எதுக்கும் காத்திருக்காமல் பாத்திர பண்டம் எத்தி வந்த தட்டிவானிலேயே எங்களையும் இழுத்துப் போட்டு அடைஞ்சு கொண்டு வெளிக்கிட்டீனம். ரயில் பஸ் எல்லாத்தையும் விட தட்டி வான் நல்லாத்தான் இருந்தது. அதுவும் வாற வழியெல்லாம் பனங்கூடல் காத்தடிக்க ஆஹா சொர்க்கம். அந்தக் காத்தும் தட்டி வான் பயணமும் பனங்கூடலின் கூவலும் சேர்ந்தால் தக தைய தைய தையா தையா நெஞ்சு றக்க கட்டிப் பறக்குது..... எண்டு பாடலாம். ஆனால் அந்த நேரம் உயிரே படம் வரவும் இல்லை நான் வளரவும் இல்லை என்பது இப்ப ஒரு மனக் குறை தான் அதை விடுவம்
தட்டிவானில் பொருளேற்ற வந்த அண்ணா தட்டியில் தொற்றிக் கொண்டிருந்த விதம் பார்க்க நல்லா இருந்தது. நானும் அது மாதிரி தொற்றிக் கொண்டும் நிண்டு கொண்டும் வரவேணும் போல இருந்தது தட்டி குலுக்கும் போது விழுந்தெழும்பி சிரிக்கவேனும் எண்டு ஆசை வந்தது . அம்மாட்டைக் கேட்டன். மத்தியானம் நடந்ததை நான் மறந்தப் பிறகும் மறக்காத அம்மா பல்லை நெருமிக்கொண்டு ரெத்தம் வர நுள்ளி வைச்சிட்டா . இதுக்கும் மேல கேட்டால் அதுக்குகுள்ளேயே அடிநடக்கும் எண்டு போட்டு வாலைச் சுருட்டிக் கொண்டிருக்க சும்மா கிடக்கேலாத கடல் பொக்கிசங்கள் அதிகமா முக்கி முனகினதோட நாத்தமும் எடுக்கத் தொடக்கிட்டுது ஆளாளுக்கு ஆராய வெளிக்கிட்டிச்சினம்
கோயில் மடத்திலும் இப்படி சத்தம் வந்தது எண்டும் மணம் கிளம்பினது எண்டும் ஆளாளுக்கு பட்டிமன்றம் நடத்தத் தொடங்கிச்சினம் . பின் குண்டு தேடுற போல கிண்டிக் கிளறி தேடலும் நடந்தது . பொத்தி வைச்ச புதையலைக் கண்டு பிடிச்சு எடுத்ததும் நாங்கள் முழங்காலுக்குள்ள முகத்தைப் புதைச்சுக் கொண்டு ஒண்டும் தெரியாத மாதிரி நித்திரை கொண்டம் .
பாவத்தை துலைக்க கோயிலுக்குப் போனால் உதுகள் உந்தளவு உயிரையும் அள்ளிக்கொண்டு வந்து கோயிலுக்குள்ள வைச்சு சாகடிச்சு ஒரு கோடி பாவத்தை அள்ளிக் கொண்டு வந்தெல்லோ நிக்குதுகள் எண்டு ஆளாளுக்கு ஆரம்பிக்க கடைசியா தட்டிவான் ஓடின அண்ணாவும் அதில தொங்கிக் கொண்டு வந்த அண்ணாவும் தான் எங்களுக்காக வக்காலத்துக்கு வந்து அடிக்க விடாமல் கடவுள் மாதிரி காப்பாற்றி விட்டினம். சத்தியமாய் அண்டைக்கு அவை தான் எங்களுக்கு மாயவன் .
அந்தத் தட்டி வான் எங்களை இறக்கி விட்டிட்டுப் போகும் போது தான் சரியான கவலையாய் இருந்தது. அதன் மீது பெரிதாயொரு காதல் பிறந்திருந்தது. எப்பிடியும் நான் உன்னில தொங்கிக்கொண்டு போவன் எண்டொரு சபதமும் பிறந்திருந்தது.
எண்ணங்கள் தான் செயலை ஆட்சி செய்கிறது என்பார்கள் சரியோ பிழையோ தெரியாது ஆனால் என் காதலுக்குரிய தட்டிவானில் பயணிக்கும் ஒரு நாளும் வந்தது. என் வாழ்வில் மறக்க முடியாத நாட்களில் ஒருநாள். . சாவையும் சிரிச்சுக் கொண்டே ஏற்கத் தயாராக இருந்த ஒரு நாள். நான் இறுதியாய் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த . கண்ணீர் என் மனதைத் தீண்டிப் பார்க்காத கடைசி நாள். .........
நாளைக்குப் பார்ப்போம் ............................

Friday, January 1, 2021

அட்டை

வண்டி பிராங்க்பெர்ட்   விமானநிலையத்தை நோக்கி  ஓடிக்கொண்டிருந்தது. ஜன்னல் கரையில் அமர்ந்து வேகமாக  விடைகொடுத்து நகரும் கட்டடங்களையும்  மரங்களையும்  பார்த்துக்கொண்டிருந்த அச்சு  அருகிலிருந்த அம்மாவின்  பக்கம் திரும்பினாள். அம்மாவின்  முகத்தில் ஒரு வித ஒளிர்வையும் , இனங்காண முடியாவோர் இறுக்கத்தையும் கவனித்தாள்.

 ஊருக்குப்போவதாக  முடிவெடுத்த  நேரத்திலிருந்தே  அம்மாவின் முகத்தில் அந்த வித்தியாசத்தை  அவதானித்திருந்தாள் அச்சு. பொதுவாகவே ஊருக்கு வெளிக்கிடும் ஒவ்வொரு தரத்திலும்  அம்மாவின்  முகத்தில் ஒரு பிரத்தியேக  மாற்றம்  தெரிவதை அவள் அவதானித்திருக்கிறாள்.    ஊரில் நிற்கும் நாட்களில் குடத்தில் இருக்கும் தண்ணீர் முழுவதையும் உறிஞ்சிக் குடித்துவிட  அவாவும் ஒரு காகத்தின் அதகடி  அவள் கண்களில்  அலைபாய்ந்து கொண்டிருக்கும்.    ஆனாலும் . மீண்டும் ஐரோப்பாவுக்குத்  திரும்பி வரும் போது அவள் எதிர்பார்த்த  எதுவோ நடக்கவில்லையான  ஏக்கம் கண்களில்  கலங்கலாக  எஞ்சி வெறித்து நிற்கும். , வந்த  பின் அது எப்போதும் போல  எழுதிவைத்த கண்கள் போலாகி விடும் .அம்மா  வழமைபோல வேலைத்தளம் வீடு என இயந்திரகதியில்  இயங்க  ஆரம்பித்து விடுவாள். எந்த இயக்கத்தின் போதும் மாற்றமற்று   அந்தக் கண்கள்   அச்சுவின் பார்வைக்கு  சித்திரத்தில் எழுதிய கண்களைப் போலிருக்கும்.  

அச்சுவின் சிறுவயதிலிருந்தே அம்மா எப்போதாவது தானும்  அச்சுவும்  தனியாக உள்ள  நேரங்களில்  கதைகள் சொல்லுவாள். அவை யாரோ  எழுதிவைத்தவையல்ல.  அம்மாவின் கதைகள் அம்மாவிடமிருந்து தான் வந்தன.  .  அந்தக் கதைகள் அவள்  பிறந்து  வளர்ந்த  மண் பற்றியதாக  இருந்தன.  

அம்மாவின்  கதைகளில்  வந்த ,  அநேகமாக    நிறைய களைத்து  வியர்த்தவர்களாக   எப்போதும் இருக்கும்  அந்த நபர்களிடம்   ஒரு நிமிர்வு  இருந்தது.  அப்படியான  சிலரின் பெயர்களை அடிக்கடி  உபயோகித்தாள் .

அப்படி  அவள்  உபயோகித்த  பெயர்களில்  ஒன்று  டானியேல்.   வேறு யாருடையதோ கதைகளைச் சொல்லும் போது  கட்டாயம் போலும் , நிராகரிக்க முடியாதது  போலும் சிலவேளைகளில்   இந்தப் பெயர் வந்து புகுந்து கொள்ளும்.  புகுந்து  கொண்டதானால் சட்டென  அந்தக் கதை தடைப்பட்டு  விடும்.  அம்மா  இலக்கற்று  எங்கோ வெறிப்பாள். பட்டென  அவள் கண்கள் கலங்கி  முட்டும் . ஏதோ  தவறு செய்த பதட்டத்தில் உதடும் அவள் கைகளும்  நடுங்கும்.  அதற்கு மேல்  அம்மாவை  இழுத்து,  விட்ட இடத்திலிருந்து தொடர வைத்தாலும் , சுவாரசியம் அற்று ஏதோ  ஒப்புக்கு  இரண்டு வரிகளில்  கதை முடித்து  விட்டு அச்சுவின் தலையைத்  தடவியவாறே  "தப்புச் செய்திட்டேன்  அச்சு "என்பாள். 

"உனக்கென்று  உள்ள   இரகசியங்களை  மனதில்  மறைத்து வைக்கப் பழகிக் கொள் " என்பாள்.  இன்னோர்  இப்படியான  பொழுதில் . . குற்றஉணர்ச்சியற்று  வாழ்தலே  வாழ்வின் மிகப்பெரும் நிம்மதி . நீ உனக்கானவைகளை  உனக்குள் வைத்திருக்கக் கற்றுக் கொள்  சம்பவங்களோடு  சம்பந்தமில்லாத  எவரிடமும் எதையும்  என்றும் உளறி விடாதே"  என்பாள். 

அச்சு வளர்ந்த போது, அம்மாவின் கதைகளிலிருந்து  அம்மா வளர்ந்த  வீட்டைச் சுற்றி  போராளி முகாம்கள்  இருந்ததைப் புரிந்து  கொண்டாள்.  அம்மா  சிறுமியாக  இருந்த போதிருந்தே  அவர்களுக்கு  மத்தியில்  வளர்ந்ததனால்  அவர்களுடன்  அதிக  நெருக்கம் கொண்டவளாகவும்,   அவர்களது நம்பிக்கைக்கு   உரியவளாகவும்  இருந்திருக்கிறாள். ஒரு காலத்தில்  அவளது  சுற்றம்  சூழல்  எல்லாம்  அவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.   அவள் தன் வீட்டு  வாசல் தாண்டுவதானாலும்  அவர்களைக் கடந்தே செல்லவேண்டியிருந்திருக்கிறது.  என்றான  சூழலில்  அவளுக்கு  பலரைப்பற்றியும்  நிறையவே  தெரிந்திருக்கிறது. அவர்களது  குடும்பங்களுடன்  பரிட்சயம் இருந்திருக்கிறது என்பதை  ஊகித்துக் கொண்டாள். 

அச்சுவும் அம்மாவும் சேர்ந்திருந்து வெளிநாட்டுப் போராட்டப் படங்கள்  பார்க்கும் போது  அம்மா  அடிக்கடி முகத்தைச் சுளித்துக் கொள்வாள். உடலைச் சுற்றி  துப்பாக்கி ரவைகளை  அணிந்திருக்கும்  நடிகனைப்  பார்க்கும் போது "துடைப்பக்கட்டைக்குப் பட்டுக் குஞ்சம் கட்டியது போலிருக்கு .  ஆயுதம் தூக்கிற  நிமிர்வும்  தீரமும்   கண்களில  இருக்கவேணும்  தெரியுமோ  அச்சு". என எழுந்து கொள்வாள் .  "வாம்மா " என அழைத்தால்  "அப்போது டானியல் ரவைக்கோர்வைகளை உடலில் சுற்றிக் கொண்டு தன்னுடைய  முகாம் போராளிகளை  வழிநடத்தி களத்துக்குக் கூட்டிப்போக  வாகனத்துக்கு  அருகில் ஆயத்தமாய்  நிற்பார்  பார். அந்த நிமிர்வுக்கு இந்த நோஞ்சான்  நடிகன் பிச்சை  வாங்க வேண்டும்" என்பாள். இன்னொரு நாள் அந்தப் பெயர் தேவன்  ஆக மாறியிருக்கும். வேறொருநாள்  அது வெள்ளை  என்றிருக்கும்.. வேறும் நாட்களில் அது வேறு வேறாக இருக்கும்.   ஆனாலும்  . கண்கள் ஏதோ   ஒரு காலத்தை    தன் பார்வையில் சுமந்திருக்கும் அப்போது  அம்மாவின் முகம்  வேறு மாதிரி ஜொலிக்கும். . ஆனால் டானியேல் என்ற பெயர் குறிப்பிட நேர்ந்து விட்டால் ,  பின் சட்டென  உடைந்து அதே குற்றவாளித் தோரணையில்   குறுகி ஒடுங்கிப் போவாள். 

அம்மாவின் கதைகளிலிருந்து, ஒரு முகாமின்  பொறுப்பாளனாகவும், ஒரு படைப்பிரிவை  வழிநடத்துபவனாகவும், திடகாத்திரமான நிமிர்ந்த  மனிதனாகவும்  அச்சு  அந்த டானியலை தனக்குள்  உருவாக்கியிருந்தாள்.  டானியல்  பற்றிப் பேசும் போது அவளில் ஏற்படும் உணர்வு மாற்றங்களை அச்சு  வளரும் போது  தனக்குப்  புரிந்த விதத்தில்  கணிக்கத் தொடங்கியிருந்தாள் 

அம்மாவுக்கும்  அச்சுவின்  தந்தைக்கும் பெரிதாக  நெருக்கம் எதுவும் கிடையாது.  மாதத் தொடக்கத்தில் தனக்கான  அத்தனை செலவையும் கணக்குப் பார்த்து மேசையில்  வைத்து விடும் அம்மா அதிக வசதிகள் கொண்ட அந்த வீட்டில்   அன்னியப்பட்டு ஒதுங்கி அச்சுவுக்காகவே அந்த வீட்டில்  இருப்பது போல  தோன்றும்.  அந்த   நெருக்கமின்மைக்கும்  டானியேல்  தான் காரணமாக இருக்கவேண்டும் என  எண்ணத் தலைப்பட்டு  பின்னாளில்  அதுதான் என  தனக்குள் உறுதி செய்தும்  கொண்டாள்.    பெற்றோர்  எனினும் அவர்கள்  தனிப்பட்ட  வாழ்வை  அலசுவதும் விமர்சிப்பதும்  தனக்கு  உரிமையற்றது  என்ற  மேல்நாட்டு  மனப்பான்மையில்   வளர்த்திருந்தாள்.  

அச்சு தன்   அம்மாவை அவளது   இயல்பான இருப்பில்  மென்மையானவளாகவே புரிந்து வைத்திருக்கிறாள்.  , அதிகமாய்  அதிர்ந்து பேசிக் கூட  அச்சு பார்த்ததில்லை.   ஆனால் "கொம்மா  விசரி  வாழத்தெரியாத லூசு"  என  அடிக்கடி  எரிச்சலாக முணுமுணுக்கும்   அவளது  தந்தை  அம்மாவின்  எதிரில்  சொல்லும் போது அம்மா  தலை நிமிர்ந்து தீர்க்கமாகப் பார்ப்பாள். அந்தப்  பார்வை  மிகப் பயங்கரமான  சீறும்அனல் போலிருக்கும் .  "அடுத்தவன்  வாழ்க்கையைப் பறித்து  சுகம் தேடும்  எல்லாருக்கும்   மற்றவர்கள்  எல்லாம் வாழத் தெரியாத பைத்தியமாகத் தான் தெரியும் " என்பாள். ஒவ்வொரு சொல்லும் பற்களில்  நெரிபட்டு  சத்தமற்றுத் தெறிக்கும்.  அப்போது அம்மாவைப் பார்க்க  மிகப் பயங்கரமாக இருக்கும். அதற்கு மேல்  பேசமாட்டாள்.  விலகிச் சென்று விடுவாள். 

"அந்த மண்ணை  எவ்வளவோ  நேசிக்கும் நீ  ஏன்மா  இங்கு வந்தாய்?"  என அச்சு ஒரு போது தன் அம்மாவிடம் கேட்டாள்.. "நேசித்ததால்  தான் " என பெருமூச்சுடன் அம்மா  விலகிப் போனாள்.  அம்மா  பதில் சொல்லாத விடயங்களில்  எப்படி முயன்றாலும்  பதில் பெற்று விட முடியாது  என்பது  அச்சுவுக்குத் தெரியும்  ஆதலால் பதில் கிடையாத கேள்விகளை  அவள்  திரும்பவும் எப்போதும் கேட்பதில்லை. 

ஆனாலும்  அம்மாவின் சகோதரர்கள்  வந்து போகும்  போது  பேசிக்கொள்வதிலிருந்து  அம்மா போராளிகளுடன்  இணைந்து  சென்று விடக் கூடும்  என்ற  பயத்தில் வெளிநாட்டிலிருந்த  சகோதரர்கள்  இங்கு  அழைத்துக் கொண்டார்கள்  என்பதும்,  அப்பாவுக்கு  மாரடைப்பு வந்து விடும் ,  நான் கிணத்துக்குள்  குதித்து விடுவேன்  என பயங்காட்டி அம்மாவின் தாய்  அம்மாவைச் சம்மதிக்க வைத்து   வெளிநாட்டுக்கு  அனுப்பியிருக்கிறார்கள்  என்பதும் இங்கு வந்த பின்  அச்சுவின் அப்பாவைத்  திருமணம் செய்து  வைத்திருக்கிறார்கள்  என்பதும் , திருமணம்  செய்த பின் அச்சுவின் அப்பாவுக்கு  வதிவிட  அனுமதியும்  அச்சுவும் ஒரே காலப்பகுதியில்  கிடைக்கப்பெற்றிருக்கிறார்கள்  என்பதும் புரிந்தது. 

,  இந்த வதிவிட  அனுமதி  கிடைக்கும் வரை  அம்மா அப்பாவுடன்,  சாதாரணமாகத்தான்  இருந்திருக்கிறாள். இப்போது போல எந்த இறுக்கமும் அற்றவளாக , அச்சுவுடன்  பேசுவதைப்  போல  அல்லது  அதைவிட  அதிகமாக  அவள்  அப்பாவுடன்  அனைத்தையும்  பேசியிருக்கிறாள்..  எப்போதும் தான் வளர்ந்த சூழல் பற்றி,  சூழ  இருந்த மனிதர்கள் பற்றி போராட்டம் பற்றி,  களங்கள்  பற்றி,  காயங்கள்  பற்றி,  அவர்களின் குடும்ப  அவலங்கள்  பற்றி தான் அறிந்தவையெல்லாம்  அம்மா  பேசியிருக்கிறாள்.      அதன் பின் தான்  ஏதோ ஆகியிருக்கிறது.  நொறுங்கிப் போயிருக்கிறது  என்பதை  அச்சு புரிந்து கொண்டாள். .

அவர்கள்  கட்டுநாயக்கா  விமான நிலையத்தில்  இறங்கினார்கள்.அம்மாவின் கண்கள் வரைந்தது போலல்லாது  ஒளிரத்தொடங்கியத்தை  அது கலங்கியதை  அச்சு அவதானித்தாள்.  இம்முறைப் பயணத்தில்  அச்சு  பதினெட்டு வயது நிரம்பிய, பல்கலைக்கழகம் செல்லும் பெரிய பெண்ணாக வளர்ந்து  விட்டிருக்கிறாள் . தன்னைச் சுற்றிய  ஒவ்வொரு விடயங்களையும்  ஆராய்பவளாகவும்  அறிந்து கொள்ள  விரும்புபவளாகவும் தேடல்கள் கொண்டவளாகவும் மாறியிருக்கிறாள்.      

அவர்கள்  யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார்கள். இடையில்  அனுராதபுரத்திலும்  , புத்தளத்திலும்  உணவுக்காக வாகனம் நிறுத்தப்பட்ட போது  இறங்குவதற்கும் உண்பதற்கும் அம்மா  ஆர்வம் காட்டாது  வாகனத்துக்குள்ளேயே  அமர்ந்து கொண்டதை தாம்  இறங்கிச் செல்லும் போது  கவனித்தாள்.  

பிறகு சுற்றுச் சூழல்  கானல்வெளி போலிருந்த  ஆளரவமற்ற இடத்தில்  வாகனம் நிறுத்தப்பட்ட போது  அம்மா இறங்கினாள். கண்களுக்குள்  அந்தப் பகுதி முழுவதையும்  விழுங்கி விடுபவள்  போலப் பார்த்தாள். இவர்கள்  அம்மாச்சி உணவகத்தில் தேநீரும்  வடையும்  உண்டு விட்டு  வந்தார்கள்.   வாகனத்தில் ஏறி  அமர்ந்த போது நீண்ட பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டுச்  சொன்னாள், "நாமெல்லாம்  ஐரோப்பியப்பிரஜைகளாக  பாதுகாப்பாக வாழ்வதற்கு  மூலகாரணமான  மூச்சுகள்  இந்த  அனல் வெளிகளில்  அவலமாக  மூசிக் கொண்டிருக்கக் கூடும் " என்று.  அச்சுவுக்கு  அரைகுறையாகவே அது புரிந்தது. 

அதன் பின் வாகனம் நகர நகர அம்மா வெளிக்காட்சிகள் அனைத்தையும்  கலங்கிய கண்களுக்குள் அப்படியே கோலி எடுத்துவிடுவது போல் பார்த்திருந்தாள்.  

அவர்கள்  வீட்டின் முன்  வாகனம் நின்று  கோன்  அடித்ததும்  பாட்டியும் தாத்தாவும்  அரக்கப்பரக்க  ஓடிவந்து  பெரிய  உயர்ந்த கேற்றை  அகலத் திறந்தார்கள்.  கேற்றிலிருந்து  வீட்டு வாசல் வரை சீமேந்துச் சார்  இழுத்து சிவப்புச் சாயமடித்த  பாதையில் ஓடி நின்றது வாகனம். இறங்கினார்கள் .   இரண்டடுக்கில் பெரிய   மாடிவீடு பொலிவாக மின்னியது. 

பாட்டி வந்து கட்டிப்பிடித்து  முத்தமிட்டாள்.  தாத்தா  "வாருங்கோ குஞ்சு"  எனக் கூட்டிக்கொண்டு முன்னே நடந்தார்.  கூடவே வந்த  பாட்டி சொன்னாள்  "எல்லாம் பிள்ளைக்கு வசதியா  இருக்கோ எண்டு பாருங்கோ .  நீங்கள்  மாமாமார்  குடும்பத்தோட  லீவுக்கு வந்து நிண்டு போறதுக்காக  அங்கே நீங்கள் இருக்கிற  வசதிகளோட  பார்த்துப் பார்த்துக் கட்டிவிச்சனான்கள் " என்று .  அம்மா வாசல் படியில்  ஏறி நின்று மதிலுக்கு  அந்தப்பக்கம் கவனிப்பாரற்று மங்கிக்  கிடந்த  தான் பிறந்து வளர்ந்த வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  

அம்மாவின் அம்மா  அம்மாவின் அருகில் போனாள். "உதென்ன பிள்ளை பழையதை  எட்டிப்பார்த்துக்கொண்டு நிக்கிறாய்.  உள்ளவந்து எதையும் குடிச்சுச் சாப்பிடன் " என்றாள்.  அம்மா  திரும்பினாள். முகம் கசங்கியிருந்தது.  

"இப்ப வெளிக்கிட்டுத் திரிய   ஆமிப்பயம்  இல்லையோ?"  என்றாள்

"சீ சீ  அவங்கள்  ஒண்டுக்கும் வராங்கள்"

"அப்ப போராளிகள்  எல்லாம் சாதாரணமா  திரியலாமோ?" 

"ஓம்  உங்க  ஆர்  இப்ப போராளி. எல்லாரும் தான் திரியீனம் .  ஆருக்கு ஆரெண்டு தெரியும்" 

"எங்கட  வீட்டுக்குப் பக்கத்தில  இருந்தவை  ஆரையும்  கண்டனீங்களோ?" 

"க்கும்  விசர் தொடங்கிவிட்டுது."   அச்சுவின் அப்பா வெளிநாட்டு விஸ்கியை கண்ணாடிக் குவளையில் ஊற்றிக்கொண்டே , பொரித்த கோழிக்கால் ஒன்றை வாயில் வைத்துக் கடித்த படி  முணுமுணுத்தார்.  அம்மா அதைச் சட்டை செய்யவில்லை  இப்போது.  தனது விசாரிப்பில்  மும்முரமாக  இருந்தாள்

"ஆருக்குத் தெரியும் பிள்ளை  இருக்குதுகளோ  செத்துப் போச்சுதுகளோ  எண்டு.  பழசை  தேடுறதை  விட்டுப்போட்டு  எல்லாத்தையும்  மறந்து  சந்தோசமா  வாழுற வழியைப்பார். " 

"ராசையா அண்ணை  இங்க ஊரில   தான் இருக்கிறாரோ..?"  

"ஓமோம்  அவன் இஞ்ச  தான்.  நீங்கள் வாறியள்  எண்ட உடன  ஓடித்திரிஞ்சு  கழுவத் துடைக்க  இடிக்க  என்று  ஆள்ப்பிடிச்சு  எல்லா அலுவலும் பார்த்தது  அவன் தான்.  சாமான் சக்கட்டு வாங்கித்தர பின்னேரமா  வருவான். "

அம்மா  பின்னேரம் வரை  காத்திருந்தாள்.  ராசையா  அண்ணை  வீட்டு வாசல் தாண்டி உள்ளே  வராமல்  வெளியிலேயே  நின்று  நலம் விசாரித்தார் .  அம்மா வெளியே  போய்  உள்ளே அழைத்தாள். வெளிவாசலுடன் நின்று கொண்டார். அம்மா எதற்கோ  ஆத்திரத்துடன்  காலைத் தரையில்  உதைத்து  நடந்தாள்.  கதிரையை  இழுத்துப் போட்டு  வெளி வராண்டாவில் வற்புறுத்தி  அமரவைத்தாள்.  அம்மாவும்  அவரும் பேசிக்கொண்டதில்  மிகுந்த அன்னியோன்னியம்  இருந்ததை  அச்சு  கவனித்தாள். 

"விசாரிச்சீங்களோ  அண்ணை?". 

"ஓம் பிள்ளை.  ஒவ்வொரு  தரமும்  நீங்கள்  வந்து  சொல்லிப்போட்டுப்  போகும் போது  விசாரிக்காமல்  இருப்பேனோ.   நானே சொல்லவேணும்  எண்டு தான்  காத்திருந்தனான் "

"அப்போ ?"

"ஓம்   தகவல்  கிடைச்சது.  ஆள்  உயிரோட  தான் இருக்குதாம்." 

பின்  ஏதோ  தொடர்ந்து  பேசிக்கொண்டிருந்தார்கள். "முகுந்தன்  எண்டு சொன்னால்  தான் தெரியும்.   சந்தை  நேரம் தான்   ஆளைப் பிடிப்பது  இலகு  பிள்ளை ." என்பது மட்டும்  அச்சுவின் காதில்  விழுந்தது  அம்மாவின் முகத்தை  இப்போது  ஹாலில்  இருந்த அச்சுவால்  கணிப்பிட முடியவில்லை.  அவள் அச்சுவுக்கு முதுகு காட்டி  அமர்ந்திருந்தாள்.  

அடுத்த நாள்  காலையில் அம்மா  மிகவும் பரபரப்பாக இருந்தாள்.  தாத்தாவிடம் சொல்லி  ஒரு ஓட்டோவை  வரவழைத்தாள். அச்சுவையும்  துணைக்கு அழைத்துக் கொண்டு  வெளிக்கிட்டாள்.  எங்கே  என்று கேட்கத் தோன்றவில்லை.  அது அச்சுவுக்குப் பரீட்சயமில்லாத  இடம்.  ஆகையால்  யாராவது  அழைத்துச் செல்லும் இடத்துக்குத் தான் போக முடியும். அத்துடன்  அம்மாவின் பரபரப்பு  அச்சுவுக்குப் புரிந்தது  ஆதலால்  கேட்கத் தோன்றவில்லை. 

நீண்ட தூரம்  போனார்கள் .  ஓட்டோ  ஒருமணி  நேரத்துக்கும் மேலாக  ஓடியது.  ஒரு பெரிய  சந்தைக்கருகே ஓட்டோவை  நிறுத்தி காத்திருப்பில்  வைத்து  இறங்கினாள்  அம்மா. அச்சுவை  இறங்கு என்றோ  இறங்காதே  என்றோ  சொல்லாததால்  அம்மா  உடனே வந்து விடுவாள்  என  அவள் ஓட்டோவுக்குள்  காத்திருந்தாள்.  வாசலில் பெரும்கடை  விரித்திருந்த  ஒருவரிடம்  அம்மா  எதுவோ   விசாரிப்பது  தெரிந்தது. அச்சு அருகே  இருந்த கடைகளை வேடிக்கை பார்த்தாள்.  பின் ,  மொபைலை  எடுத்து  கண்டிகிரஷ்சாகா  விளையாட ஆரம்பித்தாள்.

விளையாடிச் சலித்து நிமிர்ந்தாள்.   அம்மா   வேறு யாருடனோ  குனிந்து  பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அருகே  சென்றாள் .  கறுத்து வறண்டு மெலிந்து கிடந்த  அந்த மனிதரின் முகத்தை மறைத்திருந்தது  பலநாட்கள்  சவரம் செய்யப்படாத  நரைத்த  தாடி மீசை. முன்நெற்றி முடி முழுவதும்  கொட்டியிருந்தது. வழமைக்கு ஒவ்வாத  விதமாக காலை மடித்து, ஒரு கரத்தில் தன் உடல் பாரத்தை  ஊன்றி   சாய்வாக   ஒரு சாக்கில்  அமர்ந்திருந்த அவர் நிமிர்ந்து முகம் பார்க்க  அல்லது  காட்ட விரும்பாதவர்    போலக் குனிந்து கொண்டே  சன்னமான குரலில் பேசிகொண்டிருந்தார். .  அவர்  முன்னே    நான்கைந்து  தேங்காய்களும்  வெங்காயம், பச்சைமிளகாய், சில  வாடிய  கீரைக்கட்டுகள், கொஞ்சம் கத்தரி  தக்காளி  என  ஒரு  சாக்கில்  பிரித்து வைக்கக் கூடிய  சிறு சிறு குவியல்கள்  பரப்பபட்டிருந்தன.  

அச்சுவுக்குச் சலிப்பாக  இருந்தது  அம்மா அவருக்காகக்  காத்திருந்தாள்.  சந்தையில் சனம் குறைந்த  போது ஒரு  சிறுவன்  சைக்கிளில்  வந்து   அந்தச் சாக்கருகே  நிறுத்தினான். அவர்  எழுந்திருக்க  முனைந்தார்.  இரு கைகளையும்  நிலத்தில் ஊன்றி, இடுப்பை  மேலே உயர்த்தி,  ஒரு காலில் முட்டுக் கொடுத்து  தடி  ஒன்றை  ஊன்றி நிமிர்ந்தார்.  இடுப்பிலிருந்து ஒரு பக்கம்  சாய்ந்து ஊன்ற முடியாது தொங்கியது  ஒரு கால். அம்மா முகத்தில்  அனல் அள்ளிக் கொட்டியது போல  சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டாள். சிறுவன்  சாக்கில்  கிடந்த காய்கறிகளை ஒரு உரப்பையினுள்  போட்டுக் கட்டி  கரியரில்  வைத்துக் கட்டினான்.  அந்தமனிதர்  அம்மா  எவ்வளவோ  அழைத்தும் ஆட்டோவில்  வர  மறுத்து  சிறுவனின்  சைக்கிள்  பாரில் அமர்ந்து கொண்டார். 

சைக்கிளுக்குப்  பின்னால்  ஓட்டோ  நகர்ந்து ஊர்  ஒதுங்கிய ஒரு வீதியிலிருந்து இறங்கி    மண் ஒழுங்கைக்குள்  நுழைந்து  தட்டிப்படலை  வாசல் முன் நின்றது  அம்மா  இறங்கி  சைக்கிளின் பின்னால் உள்ளே போனாள்.  அச்சுவும் பின்னால்  போனாள். "இது தான் வீடு"  என சைக்கிள்காரச் சிறுவன் சொன்னது போல  அது வீடாக  அச்சுவுக்குத் தோன்றவில்லை. ஒரு  அடி   உயரத்துக்குக் குந்து வைத்து சுற்றுவர  ஓலைச் செத்தை  கட்டி  மேலே  தகரம்  போட்டு மூடிய  ஒன்றை  வீடு  என்று  அச்சு இதுவரை  எங்கும் கண்டதில்லை. 

"உலைவைச்சு சோறு வடிச்சுப் போட்டன் .புழுக்குத்தினது  வாடல்  ஏதும் மிஞ்சினதேயப்பா. உடன கறிச்சமைச்சுத் தந்திடுவன்"   கேட்டுக்கொண்டே  வெளியே  வந்த  பெண்  புதியவர்களைக்  கண்டதும் சற்றுத் தடுமாறினாள்.  போசாக்கற்ற வறுமையின்  குழந்தைகள்  சில அச்சுவிலும் குறைந்த வயதுகளில்  வாசலால்  எட்டி  அவர்களை  வேடிக்கை பார்த்தனர்.  அவளுக்கு  என்னவோ  போலிருந்தது   வெளியே வந்து தட்டிப்படலையையும்  கரையான் புற்றெடுத்தவேலியையும்  மண்  ஒழுங்கையையும்  வேடிக்கை  பார்த்துக் கொண்டு  அம்மாவுக்காகக் காத்திருந்தாள்.  

ஓரளவு  நேரத்துக்குப் பிறகு  வந்த  அம்மாவின் முகம் இறுகிப் போயிருந்தது. உதடுகளை  அழுந்தக் கடித்திருந்தாள்.  வாசல்  வரை  தடியூன்றிக் கொண்டு  சாய்ந்து சாய்ந்து நடந்து  வந்து விடை கொடுத்த  அந்த மனிதர்,  அச்சுவின்  தலையில்  உரிமையுடன் வருடி , கன்னப் பக்கமாய்  முகவாயை  ஏந்தி " போயிற்று  வாங்கோம்மா  நல்லாப் படிச்சு  பெரிய  ஆளா  பெயர் சொல்ல  வாழோணும்  பிள்ளை"  என்று சொன்ன குரலிலும்  காய்த்துக் கிடந்த கரடுமுரடான  அந்தக் கரங்களின்  வருடலிலும்  மிகவும் நெருக்கமும் வாஞ்சையும்  நிறைந்திருந்தது  போல  உணர்ந்தாள்  அச்சு. 

வீடு  வந்து  சேரும் வரை  அம்மா  அதே இறுக்கத்திலேயே  இருந்தாள்.  வழியில்  எதுவும் பேசவில்லை.  கடித்திருந்த  உதடுகளைப் பிரித்தால்  கதறுவாளோ  கடூரமாகக் கத்துவாளோ   போன்ற தோரணையில்  இருந்தாள். மதியம் கடந்து  மாலையாகிக் கொண்டிருந்தது . பசித்தது.  அச்சுவுக்குப் பசிப்பதைப் பொறுக்காத அம்மா  இன்று வழியில்  ஏதாவது  குடிக்க  வாங்கித் தரட்டுமா  என்று கூடக் கேட்கவில்லை ..  

வீட்டுக்கு  வந்ததும்   அச்சு  அவசரமாக  வாஷ்   ரூமுக்குப்  போய்  பிரஷ்  ஆகி வந்து   சாப்பாட்டு மேசையில்   மூடியிருந்த உணவுகளின் மூடிகளை  நீக்கினாள்.  அம்மம்மா  பரிமாற  ஓடி வந்தாள். முந்திரியும்  வதக்கிய இறைச்சித் துண்டுகளும் தாராளமாக  மிதந்த நெய்ச் சோற்றை ஒழுக ஒழுக  தட்டில்  வைத்தாள்  அம்மம்மா .  ஆட்டுக்கறிப் பிரட்டலையும் , ஒரு மீன் பொரியலையும்  எடுத்துத் தட்டில்  வைத்துக் கொண்டு  டீவீக்கு  நேரே இருந்த  ஆடுகதிரையில்  அமர்ந்தாள்.  "உங்களுக்கெண்டு  இறால் நண்டு  எல்லாம் சமைச்சு வைச்சிருக்கிறன்  இதென்ன  வெறுஞ்சோற்றைச் சாப்பிட்டுக் கொண்டு " என சொல்லியவாறே  அச்சு  மறுக்கமறுக்க  சாப்பாட்டுக் கோப்பையில்  விதவிதமாகப் பரப்பினாள் அம்மம்மா. 

  அம்மா  உள்ளே  வராமல்  வெளி வராந்தாவில்  போட்டிருந்த  கதிரைகளில்  ஒன்றில் பொம்மை  போல அமர்ந்திருந்தாள். கண்கள் , கவனிப்பாரற்றுப் பாழடைந்து கிடக்கும்  அம்மா வளர்ந்த வீட்டை நோக்கியிருந்தன . அம்மம்மா  அம்மாவை  சாப்பிட அழைத்தாள்.  அம்மா  அழைப்பை  உணர்ந்ததாகத் தெரியவில்லை. 

"என்ன  ஆச்சுப் பிள்ளை  உனக்கு. எங்கை  போட்டு வந்தனி ?" என்றாள்  அம்மம்மா.  

அம்மா நிமிர்தாள்.  

 "டானியேல்  அண்ணாவைப் பார்க்க" 

அச்சு  திடுக்குற்றுப் பார்த்தாள்

"ஆர்....  ஓ......  பொடி  உசிரோட  இருக்குதோ ? வந்தனி  சங்கையாக நாலு இடம்   திரிஞ்சு திண்டு குடிச்சு  சந்தோசமா  போறதை விட்டு  உதுகளை  எல்லாம் ஏன்  தேடித் போறாய்?"

"வேறை  என்ன  விசர்  தான்§  அம்மம்மா கொடுத்த உசாரில்  அப்பாவின் குரல்  இப்போது  சத்தமாகவண்டி பிராங்க்பெர்ட்   விமானநிலையத்தை நோக்கி  ஓடிக்கொண்டிருந்தது. ஜன்னல் கரையில் அமர்ந்து வேகமாக  விடைகொடுத்து நகரும் கட்டடங்களையும்  மரங்களையும்  பார்த்துக்கொண்டிருந்த அச்சு  அருகிலிருந்த அம்மாவின்  பக்கம் திரும்பினாள். அம்மாவின்  முகத்தில் ஒரு வித ஒளிர்வையும் , இனங்காண முடியாவோர் இறுக்கத்தையும் கவனித்தாள்

வே வெளிவந்தது. 

அம்மா நெருப்பு போல எழுந்தாள்

"ஓம்  விசர்  தான். அந்த விசரில  தான்    விசம் எண்டு அறியாது  எல்லாத்தையும்  சொன்னனான்.  அணைக்கும் போதும் , படுக்கும் போதும் , அரைநித்திரையிலும் நயவஞ்சகமா காதல் கதை பேசி  நம்பிக்கை கொடுத்து  அவங்களுக்கு  உதவுவன் எண்டு நம்பிக்கை  தந்ததால  தான்  எனக்குத்தெரிஞ்ச  எல்லாரையம்  பற்றி, அவங்களுக்குப் பின்னால  இருந்த எல்லாக் கதைகளும்   சொன்னனான். 

டானியேல் இயக்கத்துக்கு  வந்தப்பிறகு  பொம்பர் போட்ட குண்டில வீடு சிதறி குடும்பத்தில  சாவுகள் விழுந்து போச்சு, தாயும் சகோதரிகளும் ஒதுங்கக் கூரையில்லாமல்  நிக்குதுகள்.  இவ்வளவு   பயிற்சி  எடுத்து , இத்தனை களங்களில் அனுபவம் பெற்றப் பிறகு குடும்பத்தை  நினைச்சு  தேசக் கடமையை விட்டிட்டுப் போகமாட்டன் என்று நின்ற மனிதனின் குடும்பம். அது  ஒதுங்க  ஒரு குடிசையாவது  கட்டிக் குடுக்க வேணும். அது  எங்கட கடமை என்று கேட்டன்.  டானியல்  அண்ணாவுக்கு  எதுவும் தெரியாமல்  இருந்தாலும் அவரின்ர குடும்பம்  நான் கொடுத்த  வாக்குறுதியை  தங்கட  அவல  நிலையில  நம்பியிருந்தது. 

"உங்கட மருமோன்  எப்பிடி நடிச்சு  என்னை  நம்பவைச்சு  அவையின்ர  விபரம் எல்லாம் கேட்டு, அந்தச் சிதறின  வீட்டையும் படமெடுத்து  அனுப்பவைச்சு, அது அத்தனையும்  தன் குடும்பத்துக்கு  நேர்ந்த  அவலமாக கதை  சோடிச்சு, தன்னுடைய  அகதி விண்ணப்பத்தில், தான் அனுதாபத்துக்குரிய  அங்கீகரிக்கப்பட வேண்டிய  அகதி என்று  உறுதிப்படுத்தி  விசா  எடுத்தார்  என்று  கேளுங்கோ."

அம்மம்மா விழி பிதுங்கப் பார்த்துக் கொண்டிருந்தாள்.   தாத்தாவின் திகைப்பு திறந்த வாயை மூட  மறந்திருந்தது. 

 "அதுக்குப் பிறகு நான் சொன்ன கதைகளை வைத்து  விசாவுக்குக் கதை எழுதிப் பிழைக்கிற பிரபலமாகிவிட்டார் உங்கட  மருமோன். அதோட முடிஞ்சுதா  கடைசிப் போர் நேரம்  திருவோடு  ஏந்தாத குறையா  வெள்ளைக்காரரிட்டை கூட  மானம் கெட்டுக் கெஞ்சி வாங்கின காசு  எங்கை எண்டு கேளுங்கோ "

அம்மாவுக்கு மூச்சு வாங்கியது 

"கொடுத்த வாக்குறுதி , பட்ட கடன்  ஒரு கொஞ்சமாவது அடைச்சுப்போட வேணும் என்று  தான் இத்தனை காலமா  தேடினேன். ஒதுங்க  ஆனதாக ஒரு கூரை  இல்லாமலே மழையும் ஒழுக்குமா கிடந்தது சிதைஞ்சு  தாய் செத்துப்போச்சு.  போக்கிடமற்று, சகோதரிகள் போருக்குள்  முடிஞ்சு போனது  அவருக்குச் சந்தோசம் தான் "

 அம்மா  முழங்கால் மடித்து அப்படியே  தரையில்  வழுக்கி உடைந்து   அழுதாள். 

அம்மாவின் குணம்  அறிந்த அம்மம்மா  "சரி  ஏதாவது  உதவி  செய்யலாம் எழும்பு வந்து சாப்பிடு" என்றார் . 

"கேட்டேன்.  மறுத்திட்டார். தன்மானம் மட்டும் தான்  மிச்சமிருக்காம்.  அதாவது  சாகும் வரைக்கும்  மிஞ்சி இருக்கவேணும்  எண்டிட்டார்." 

அச்சுவுக்கு  உள்ளே சில்லிட்டது . 

.'புழுக்குத்தினது  வாடல்  ஏதும் மிஞ்சினதேயப்பா. உடன கறிச்சமைச்சுத் தந்திடுவன் ' என்ற  குரல் மனதுக்குள்  ஒலித்தது. 

தன் சாப்பாட்டுத் தட்டைப் பார்த்தாள். தட்டு நிறைய அருவருப்பாக எதுவோ  நெளிவது போலிருக்க ,அதிர்ந்து எழுந்தாள் . தட்டு கீழே விழுந்து சிதறியது. தட்டிலிருந்து தெறித்த மாமிசத் துண்டுகள்  இரத்தம் ஒழுகும் மனிதத் துண்டங்கள்  போல்  பெரிய கொடுக்குகளுடன் நெளிந்து நெளிந்து  அச்சுவை  நெருங்குவது போலிருந்தது.     கண்களை  மூடி  இரண்டு கைகளாலும்  தலையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு வீடே அதிர  வீரிடத்தொடங்கினாள்

முதல் முறையாய் அவளது தந்தை   அதிர்ந்து  திரும்பிப்பார்த்தார்.